search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவுரவ விருது"

    • மன்னர் 3-ம் சார்லஸ் நவம்பர் 14-ந் தேதி தனது 75-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
    • மன்னரின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    லண்டன் :

    இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லஸ் வருகிற நவம்பர் மாதம் 14-ந் தேதி தனது 75-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவர் மன்னராக முடிசூட்டிக் கொண்ட பிறகு கொண்டாடும் முதல் பிறந்த நாள் இதுவாகும். எனவே மன்னரின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இங்கிலாந்தில் மன்னரின் பிறந்தநாளை முன்னிட்டு மருத்துவம் உள்பட பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களின் பட்டியலை இங்கிலாந்து அரசு வெளியிட்டுள்ளது.

    இந்த பட்டியலில் மொத்தம் 1,171 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 52 சதவீதத்தினர் தங்கள் வேலை செய்யும் துறைகளில் சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தியவர்கள் என்றும் 11 சதவீதத்தினர் சிறுபான்மை இனத்தை சேந்தர்வர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த பட்டியலில் 40-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளி டாக்டர்கள், தொழிலதிபர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    இந்திய வம்சாவளி பட்டியலில், டாக்டர் பர்விந்தர் கவுர் அலே, பேராசிரியர் புரோகார் தாஸ்குப்தா, தொழிலதிபர் அனுஜ் சண்டே மற்றும் ஹினா சோலங்கி, பல்வீர் மோகன் பல்லா, ரேகேஷ் சவுகான், கைலாஷ் மல்ஹோத்ரா, பல்பீர் தில்லான் மற்றும் குல்தீப் சிங் தில்லான் உள்ளிட்டோர் உள்ளனர்.

    ×