search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவுமாரியம்மன் கோவில்"

    • 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கிராம கோவிலான கவுமாரியம்மன் கோவிலில் ஆனிபெரு ந்திருவிழா தொடங்கி நடந்த வருகிறது.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், தீச்சட்டி எடுத்தும் ஆயிரம் கண் பானை, மாவிளக்கு எடுத்தும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    பெரியகுளம்:

    தேனிமாவட்டம் பெரிய குளத்தில் இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கிராம கோவிலான கவுமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆனிபெரு ந்திருவிழா தொடங்கி நடந்த வருகிறது.

    கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவில் முக்கிய 3 நாட்களில் நடைபெறும் திருவிழாவின் 2வது நாளாக இன்று ஆயிரக்கணக்கான பக்த ர்கள் அலகு குத்தியும், தீச்சட்டி எடுத்தும் ஆயிரம் கண் பானை, மாவிளக்கு எடுத்தும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    மேலும் நீண்ட காலமாக குழந்தை இல்லாமல் இருந்த தம்பதியினர் வேண்டுதலுக்கு பின் பிறந்த குழந்தையை கரும்பு கட்டில் தொட்டில் கட்டி குழந்தையை படுக்க வைத்து அதை அந்த தம்பதியினர் இருவரும் தூக்கி வந்து அம்மனுக்கு குழந்தையை காணிக்கை செலுத்தி பக்தர்கள் தங்கள் நேர்த்திகடனை செலுத்தி னர்.

    பெரியகுளத்தைச் சுற்றி யுள்ள 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி கொண்டாடப்படும் திரு விழா என்பதால் பெரிய குளம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பல்லாயிரக்கண க்கான பக்தர்கள் வருகை தந்ததால் பாதுகாப்பு கருதி பெரியகுளம் டி.எஸ்.பி. தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டி ருந்தனர். மேலும் பக்த ர்களின் பாதுகாப்பை கருதி முக்கிய இடங்களில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேம ராக்கள் பொருத்தப்ப ட்டிருந்தது.

    ×