search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவுன்சிலர் கொலை"

    • பட்டப்பகலில் அ.தி.மு.க. கவுன்சிலர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • கொலையுண்ட சந்திரபாண்டியன் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு உள்ளதாகவும், அதன் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேககின்றனர்.

    அலங்காநல்லூர்:

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே மாணிக்கம் பட்டி செல்லும் சாலையில் கருப்பங்குளம் கன்மாய் அருகே சாலையில் இருசக்கர வாகனத்தோடு தலையில் இரண்டு இடங்களில் வெட்டுப்பட்ட நிலையில் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக பாலமேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு விரைந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா கொடைரோடு, மாவுத்தன் பட்டி கிராமத்தை சேர்ந்த சந்திரபாண்டியன் (வயது 46) என்பதும், இவர் அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் தொடர்ந்து 4-வது முறையாக அ.தி.மு.க. கவுன்சிலரராக வெற்றி பெற்றவர் என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    மேலும் இவர் நத்தம் அருகே லிங்கவாடியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்து விட்டு மீண்டும் ஊர் திரும்பிய போது இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. கொலைக்கான காரணம் என்ன? முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? இல்லை வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவின் பேரில் பாலமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணையை தொடங்கினர்.

    கொலை செய்யப்பட்டவர் திண்டுக்கல் மாவட்டம் என்பதால் மதுரை, திண்டுக்கல் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் தனிப்படை விரைந்து விசாரணையை தொடங்கி குற்றவாளிகளை தேடி வருகின்றனர். கொலையுண்ட சந்திரபாண்டியன் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு உள்ளதாகவும், அதன் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேககின்றனர்.

    அவரது ஊரில் கடந்த 6 மாதங்களுக்கு முன் கோவில் திருவிழாவில் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவும் இந்த கொலை நடந்திருக்கலாம் எனவும் கொலை குற்றவாளிகளை நெருங்கி விட்டதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பட்டப்பகலில் அ.தி.மு.க. கவுன்சிலர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×