search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள் இறக்கி"

    • தடையை நீக்கி கள் இறக்கி சந்தைப்படுத்த அனுமதி வழங்க வேண்டும்.
    • ஜனவரி 21-ந் தேதி திட்டமிட்டபடி தமிழகத்தில் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும்.

    ஈரோடு:

    தமிழ்நாடு கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    உலக அளவில் 108 நாடுகளில் பனை, தென்னை மரங்கள் உள்ளன. எந்த நாட்டிலும் கள் இறக்கவும், பருகவும் தடை விதிக்கப்படவில்லை. தமிழகத்தில் மட்டுமே கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக கள்ளுக்கான தடை தொடர்கிறது.

    மனித உணவில் கள் ஒரு பகுதியாகும். கள் இறக்குவதும், பருகுவதும் இந்திய அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு வழங்கியுள்ள உணவு தேடும் உரிமைகளில் ஒன்றாகும். கள்ளில் கலப்படம் செய்யப்படுகிறது என ஒற்றை காரணத்தை கூறி அனுமதி வழங்க மறுப்பது தவறாகும்.

    கேரளாவில் கள்ளுக்கு அனுமதியும், முழுமையாக பயன்படுத்த வழிகளும் உள்ளது. அங்கு எந்த கலப்படமும், தவறும் நடக்கவில்லை. எனவே தமிழக அரசு உடனடியாக கள்ளுகளுக்கான தடையை நீக்கி கள் இறக்கி சந்தைப்படுத்த அனுமதி வழங்க வேண்டும்.

    இல்லையென்றால் வரும் ஜனவரி 21-ந் தேதி திட்டமிட்டபடி தமிழகத்தில் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும். எனவே கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×