search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லூரி மாணவி மர்ம மரணம்"

    • கடந்த வாரம் ப்ரீத்தி திடீரென விடுதியில் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு எம்.ஜி.எம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர்.
    • மேல் சிகிச்சைக்காக மீம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு 5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த பிரீத்தி பரிதாபமாக இறந்தார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ஜனகம் மாவட்டம், கிர்ணி தாண்டாவை சேர்ந்தவர் பிரீத்தி. இவர் மகாத்மா காந்தி மருத்துவமனையில் எம்பிபிஎஸ் முடித்துவிட்டு ஐதராபாத்தில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் மயக்கவியல் மருத்துவ துறை படிப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் சீனியர் மருத்துவ மாணவர்கள் ஆபரேஷன் தியேட்டரில் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது தன்னுடன் படிக்கும் சீனியர் மாணவர் சைப் என்பவர் ப்ரீத்திக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து பிரீத்தி தனது பெற்றோருக்கு தெரிவித்தார்.

    பெற்றோர் கல்லூரி முதல்வர் மோகன் தாஸ் என்பவரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து மயக்க மருந்து துறை தலைவர் நாகார்ஜூனா ரெட்டி தலைமையில் பிரீத்தி மற்றும் சைப்பிற்கு கவுன்சிலிங் கொடுத்தனர். கவுன்சிலிங்கிற்கு பிறகு இருவரும் சமாதானம் அடைந்து விட்டதாக கல்லூரி நிர்வாகம் கருதியது.

    இந்த நிலையில் கடந்த வாரம் ப்ரீத்தி திடீரென விடுதியில் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு எம்.ஜி.எம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மீம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு 5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த பிரீத்தி பரிதாபமாக இறந்தார்.

    அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து அவரது உறவினர்களிடம் ஒப்படைத்து உடல் தகனம் செய்யப்பட்டது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரீத்தி அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    பிரீத்தியின் மர்ம மரணம் குறித்து அவரது தந்தை கூறுகையில்:-

    பிரீத்தி மிகவும் மன தைரியம் உள்ள பெண் அவர் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழை கிடையாது. எனவே அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது என தெரிவித்தார். இருப்பினும் அவரது ரத்த மாதிரிகள் ரசாயன பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவருடைய பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு பிரீத்தி தற்கொலை செய்து கொண்டாரா? என்பது தெரியவரும் என கூறப்படுகிறது.

    சீனியர் மாணவர் கொடுத்த தொல்லை காரணமாக மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் பல்வேறு மாணவர் அமைப்பினர் சைபுவை கைது செய்து அவருக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். அவரது பட்டப்படிப்பை ரத்து செய்ய வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க பிரீத்தி குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    ×