search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லால் தாக்கிய கும்பல்"

    • அடையாளம் தெரியாத 4 பேர் கொண்ட கும்பல் குடிபோதையில் வந்தனர்.
    • கும்பலில் ஒருவர் கீழே கிடந்த கல்லை எடுத்து இசக்கிதுரையின் தலையில் பலமாக தாக்கினார்.

    கோவை,

    கேரள மாநிலத்தை சேர்ந்தவர் இசக்கிதுரை (வயது 32). இவர் கோவை போத்தனூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து நிறுவனத்தின் அருகே அறை எடுத்து தங்கி உள்ளார்.

    இந்த நிலையில், அவர் போத்தனூர் ரெயில்வே பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 4 பேர் கொண்ட கும்பல் குடிபோதையில் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் இசக்கிதுரையிடம் இப்போது மணி என்ன ஆகிறது? என கேட்டனர். அதற்கு அவர் பதில் அளிக்காமல் அமைதியாக நின்று கொண்டிருந்தார்.

    இதில் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் அவரை தகாத வார்த்தைகளால் பேசி தீட்டினர். பின்னர் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறிய நிலையில் அந்த கும்பலில் ஒருவர் கீழே கிடந்த கல்லை எடுத்து இசக்கிதுரையின் தலையில் பலமாக தாக்கினார். இதில் உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் அவர் கூச்சலிட்டதால், அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனையடுத்து படுகாயம் அடைந்த அவர் தனது நண்பரை அழைத்து கோவையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றார்.

    பின்னர் இதுகுறித்து அவர் போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர். பொதுமக்கள் அதிகமாக நடமாட்டம் உள்ள பொது இடத்தில் 4 பேர் கொண்ட கும்பல் வாலிபரை கல்லால் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×