search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் வழங்கினார்"

    • வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
    • 17 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், நேற்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கி,

    பொதுமக்களிடம் வீட்டுமனைப் பட்டா, விலையில்லா தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, மின் இணைப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 319 மனுக்களை பெற்றார்.

    அந்த மனுக்களை உரிய துறை அதிகாரிகளிடம் வழங்கி, தகுதியான மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுதியில்லாத மனுக்களுக்கு உரிய விளக்கத்தினை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    பின்னர், மாவட்ட கலெக்டர், சமூக பாதுகாப்பு திட்டம் சார்பாக போச்சம்பள்ளி வட்டத்தை சார்ந்த 6 பயனாளிகளுக்கு இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதியம், 4 பயனாளிகளுக்கு ஆதரவற்ற விதவை பெண்கள் ஓய்வூதியம், ஒரு பயனாளிக்கு தற்காலிக இயலாமைக்கான உதவித்தொகை, 6 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகை என மொத்தம் 17 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார்.

    முன்னதாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊரக வாழ்வாதாரம் மற்றும் மகளிர் திட்டம் மூலம் மகளிர் சுய உதவிக்குழுவினரின் கைவினைப் பொருட்கள் மற்றும் பாரம்பரிய சிறுதானிய உணவு விற்பனை கண்காட்சியை பார்வையிட்டார். 

    • காசோலைகளை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வழங்கினார்.
    • சுயதொழில் புரிவோர்கள் நல்ல முறையில் தொழில்கள் மேற்கொள்ள வேண்டும்.
    ×