search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்வம்"

    • ஸ்ரீ வியாஸராஜர் ராம நாம பஜனை மடத்தில் மார்கழி மாத சொற்பொழிவு நடந்து வருகிறது.
    • கர்வத்தை கொன்றவனால் தான் சமுதாயத்தில் தலை நிமிர்ந்து வாழ முடியும்.

    அவிநாசி :

    அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள ஸ்ரீ வியாஸராஜர் ராம நாம பஜனை மடத்தில் மார்கழி மாத சொற்பொழிவு நடந்து வருகிறது.இதில் ஆன்மீக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேசியதாவது:- குழந்தைகளுக்கு, பெற்றோர் ' நான் என கர்வத்தை ஊட்டி வளர்க்காமல், நாம் என்ற பணிவை சொல்லித் தர வேண்டும். ஒருவருடைய வாழ்வை அஸ்தமனம் ஆக்க செய்யும் சத்ரு தான் கர்வம், காமம், கோபம்.இவற்றில் மிகவும் கொடியது கர்வம். நாம் எந்த விஷயத்தில் நான் என்ற அகந்தை கொண்டு ஈடுபடுகிறோமோ அதனை நமக்கு முன்னும் பின்னரும் செய்திருக்கக் கூடிய மனிதர்கள் ஏராளம் உண்டு. கர்வத்தை கொன்றவனால் தான் சமுதாயத்தில் தலை நிமிர்ந்து வாழ முடியும். இவ்வாறு, அவர் பேசினார் 

    ×