search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருப்பு நிற டீ சர்ட்"

    • அய்யப்ப சாமி படத்துடன் கூடிய கருப்பு நிற டீ-சர்ட்டுகள் தயாரிக்கும் பணி திருப்பூரில் அதிகரித்து வருகிறது.
    • திருப்பூரில் உள்ள நிறுவனங்கள் இந்த பனியன்களை தயாரித்து வருகிறது என்றனர்.

    திருப்பூர்:

    சபரிமலைக்கு செல்ல அய்யப்ப பக்தர்கள் விரதம் தொடங்கியுள்ளதால், அவர்கள் அணியும் வகையில் அய்யப்ப சாமி படத்துடன் கூடிய கருப்பு நிற டீ-சர்ட்டுகள் தயாரிக்கும் பணி திருப்பூரில் அதிகரித்து வருகிறது.

    அய்யப்ப பக்தர்கள் கருப்பு வேட்டி, கருப்பு சட்டை, துண்டு அணிவது வழக்கம். கருப்பு நிற சட்டைகளை விட டீ-சர்ட் தற்போது அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் தமிழகம், கர்நாடகா, கேரள மாநிலத்தில் இதுபோன்ற டீ-சர்ட் விற்பனைக்கு அதிக கிராக்கி உள்ளது. அய்யப்ப சாமி படம், புலி வாகனத்தில் அய்யப்ப சாமி அமர்ந்து இருப்பது போன்ற படங்கள் பிரிண்ட் செய்யப்பட்ட டீ-சர்ட்கள் பக்தர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

    தமிழகத்தில் சுவாமியே சரணம் அய்யப்பா என்ற வாசகமும், அய்யப்ப சாமி படம் அச்சிடப்பட்ட டீ-சர்ட் அதிகம் விற்பனையாகிறது. மற்ற மாநிலங்களில் அய்யப்பசாமி படம் பிரிண்ட் செய்யப்பட்ட டீ-சர்ட்டுகள் சில்லறை விற்பனைக்காக திருப்பூரில் இருந்து அதிகம் கொள்முதல் செய்யப்படுகிறது.

    இதுகுறித்து திருப்பூரை சேர்ந்த பனியன் வியாபாரிகள் கூறும்போது, சீசன் பனியன் ஆடைகள் விற்பனை நன்றாக இருக்கும். சபரிமலை அய்யப்ப சீசன் தொடங்கியுள்ளதால் தமிழகம், கேரளா, கர்நாடகாவில் கருப்புநிற டீ-சர்ட் விற்பனை அதிகரித்துள்ளது. ரூ.100 முதல் இதுபோன்ற டீ-சர்ட் விற்பனையாகிறது. இளம்பக்தர்கள் அதிகம் வாங்குகிறார்கள். அய்யப்ப சாமி படம் ஒளிரும் மையால் அச்சிட்டு டீ-சர்ட் தயாரிக்கப்படுகிறது. திருப்பூரில் உள்ள நிறுவனங்கள் இந்த பனியன்களை தயாரித்து வருகிறது என்றனர்.

    ×