search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கமிஷனர் சங்கர் ஜிவால்"

    • விபத்து இல்லாத ஆண்டை நோக்கி நமது பயணம் இருக்க வேண்டும் என்று போக்குவரத்து போலீசாருக்கு அறிவுறுத்தி உள்ளார்.
    • முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு பணிகளையும் உரிய முறையில் திட்ட மிட்டு திறம்பட மேற்கொண்டு வருகிறார்.

    சென்னை:

    சென்னை போலீஸ் கமிஷனராக சங்கர் ஜிவால் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் 8-ந்தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பொறுப்பேற்று இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகிறது.

    சங்கர்ஜிவால் பதவி ஏற்ற அன்று ரவுடிகளை ஒழிப்பதே எனது முதல் பணி என்று உறுதி அளித்தார். அதன்படி ரவுடிகளை 3 வகையாக தரம் பிரித்து அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுத்து ஒடுக்கி உள்ளார். தொடர்ந்து ரவுடித்தனம் செய்பவர்களையும் அடையாளம் கண்டு வேட்டையாடி வருகிறார்.

    மேலும் சைபர் குற்றங்களை கண்டுபிடித்து தீர்ப்பதில் அவர் அதிக அக்கறை காட்டுகிறார். இதற்காக காவல்துறையில் நவீன தொழில்நுட்பத்தை அதிக அளவில் பயன்படுத்தவும் முன்னுரிமை அளிக்கிறார்.

    போலீஸ் நிலையங்களில் பெறப்படும் புகார்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் உன்னிப்பாக கண்காணித்து வருவதுடன் வழக்குகள் பற்றிய நிலையையும் உடனுக்குடன் கேட்கிறார்.

    கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி என தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிடுகிறார்.

    குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது உரிய காலத்துக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து உடனடியாக தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

    போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கும் உடனுக்குடன் அபராதம் விதிக்கப்படுகிறது. போக்குவரத்தை மீறி வாகனம் ஓட்டினால் அதிகரிக்கப்பட்ட அபராத தொகையை வசூலிக்க உத்தரவிட்டுள்ளார். மது போதையில் வாகனம் ஓட்டு பவர்களுக்கு அதிரடியாக அபராதம் வசூலிக்கப்படுகிறது. விபத்தால் யாரும் உயிரிழக்கக்கூடாது. விபத்து இல்லாத ஆண்டை நோக்கி நமது பயணம் இருக்க வேண்டும் என்று போக்குவரத்து போலீசாருக்கு அறிவுறுத்தி உள்ளார்.

    எனவே போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    போலீசார் மீது குற்றச்சாட்டுகள் எழும் நிலையில் உரிய விசாரணை நடத்தி அவர்கள் குற்றம் செய்தது உறுதி செய்யப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு பணிகளையும் உரிய முறையில் திட்ட மிட்டு திறம்பட மேற்கொண்டு வருகிறார்.

    தனது கடும் நடவடிக்கையால் சென்னையில் சட்டம்-ஒழுங்கை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து அவருக்கு போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

    • போக்குவரத்து போலீசார் 8 மணி நேரம் நின்று பணி செய்யும் சூழல் உள்ளது.
    • ஆண் போக்குவரத்து போலீசாரின் மனைவிகளும், பெண் போக்குவரத்து போலீசாரின் கணவர்களும் முகாமில் பங்கேற்கலாம்.

    சென்னை:

    சென்னை போக்குவரத்து போலீஸ் பிரிவில் பணியாற்றும் ஆண்-பெண் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு புரசைவாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நேற்று நடைபெற்றது.

    இந்த முகாமை சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    போக்குவரத்து போலீசார் 8 மணி நேரம் நின்று பணி செய்யும் சூழல் உள்ளது. சாலையில் நிலவும் காற்றின் தன்மை சற்று மோசமாகத்தான் இருக்கும். ஒருவர் 4 அல்லது 5 ஆண்டுகள் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருக்கும்போது காற்றின் மாசுபாடு காரணமாக அவர் பாதிக்கப்படுவார். எனவே போக்குவரத்து போலீசாருக்கு அடிக்கடி மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுவது அவசியமான நடவடிக்கை ஆகும்.

    கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலைகளில் அதிகம் பாதிக்கப்பட்டது போக்குவரத்து போலீசார்தான். எனவே போக்குவரத்து போலீசாருக்கு கட்டாயம் மருத்துவ பரிசோதனைகள் முக்கியம்.

    முழு உடல் பரிசோதனை அட்டையை வைத்துக் கொள்ளுங்கள். அந்த விவர குறிப்புகள், இதுபோன்ற முகாம்களுக்கு வரும்போதும் பயனுள்ளதாக இருக்கும். ஆண் போக்குவரத்து போலீசாரின் மனைவிகளும், பெண் போக்குவரத்து போலீசாரின் கணவர்களும் முகாமில் பங்கேற்கலாம். இது போன்ற மருத்துவ முகாம்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை நடத்தி அனைத்து போக்குவரத்து போலீசாரும் பயன்பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த முகாமில் பொது மருத்துவம், ரத்த சர்க்கரை அளவு சரிபார்த்தல், நீரழிவு, காசநோய், இதய நோய், காது, மூக்கு, தொண்டை, எலும்புகள், பல், கண் ஆகிய பரிசோதனைகள் நடைபெற்றன.

    இதில் போக்குவரத்து போலீசார் 250 பேர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர் லோகநாதன், இணை கமிஷனர் ராஜேந்திரன், துணை கமிஷனர் சாமே சிங் மீனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    ×