search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கப்பல் ஊழியர்"

    விவாகரத்து நோட்டீசு அனுப்பியதை தட்டிக்கேட்ட சிங்கப்பூர் நர்சை தாக்கி பாஸ்போர்ட்டை பறித்த கப்பல் ஊழியர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    மலேசியா நாட்டை சேர்ந்தவர் விக்னேஸ்வரி (வயது 32). இவர் சிங்கப்பூரில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இதற்கிடையே வீராம்பட்டினத்தை சேர்ந்த அமர்நாத் (வயது 34) என்பவர் சிங்கப்பூரில் கப்பல் ஊழியராக பணி புரிந்த போது இவரும், விக்னேஸ்வரியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    இதற்கிடையே கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஊருக்கு திரும்பிய அமர்நாத் அதன் பிறகு சிங்கப்பூர் செல்லவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த விக்னேஸ்வரி கடந்த 6 மாதத்துக்கு முன்பு அமர்நாத்தை தேடி வீராம்பட்டினம் வந்தார். அப்போது அமர்நாத் ஏற்கனவே திருமணமாகி உள்ளதை அறிந்த விக்னேஸ்வரி அதிர்ச்சி அடைந்தார்.

    இதனை தட்டிக்கேட்டபோது விக்னேஸ்வரியை அமர்நாத்தின் உறவினர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதற்கு நியாயம் கேட்டு விக்னேஸ்வரி தனது குழந்தையுடன் கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம் நடத்தினார். போலீசார் அவரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் விக்னேஸ்வரிக்கு அமர்நாத் விவாகரத்து நோட்டீசு அனுப்பினார். இதனால் ஆவேசம் அடைந்த விக்னேஸ்வரி கடந்த சில நாட்களுக்கு முன்பு அமர்நாத்தின் வீட்டுக்கு சென்று தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த அமர்நாத் விக்னேஸ்வரியை தாக்கி அவரிடம் இருந்த பாஸ்போர்ட்டை பறித்து வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து விக்னேஸ்வரி அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    ×