search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கன்கார்ட் சங்மா"

    • மேகாலயா சட்டசபை தொகுதிக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி 27-ம் தேதி நடந்தது.
    • வாக்கு எண்ணிக்கை முடிவில் சங்மாவின் கட்சி 26 இடங்களைக் கைப்பற்றியது.

    ஷில்லாங்:

    மேகாலயா சட்டசபை தொகுதிக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி 27-ம் தேதி நடந்தது. இதில் தேசிய மக்கள் கட்சி (என்.பி.பி.) தலைவர்களில் ஒருவரான மாநில முதல் மந்திரி கன்ராட் சங்மா தெற்கு துரா தொகுதியில் போட்டியிட்டார்.

    பா.ஜ.க.வை சேர்ந்த அசாம் முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வாவை சங்மா நேரில் சந்தித்துப் பேசினார். ஆட்சி அமைக்க பா.ஜ.க.வின் ஆதரவை பெற இந்த சந்திப்பு நடந்தது என கூறப்படுகிறது.

    இதற்கிடையே, மேகாலயாவில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்த வாக்கு எண்ணிக்கை முடிவில் சங்மாவின் கட்சி 26 இடங்களைக் கைப்பற்றியது.

    இந்நிலையில், முன்னாள் துணை முதல் மந்திரி மற்றும் தேசிய மக்கள் கட்சி எம்.எல்.ஏ.வான பிரெஸ்டோன் டின்சாங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி தலைமையிலான அரசின் பதவியேற்பு விழா வரும் 7-ம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளார். இதன்படி, கட்சி தலைவர் கன்ராட் சங்மா முதல் மந்திரியாக பதவியேற்க கூடும் என கூறப்படுகிறது. இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, அசாம் முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    ×