search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனிமொழி எம்பி"

    • பாடகி பவதாரிணி புற்றுநோய் பாதிப்பால் கடந்த 25-ம் தேதி உயிரிழந்தார்.
    • பவதாரிணி மறைவு திரையுலகத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

    இசைஞானி இளையராஜாவின் மகள் பாடகி பவதாரிணி புற்றுநோய் பாதிப்பால் கடந்த 25-ம் தேதி உயிரிழந்தார்.

    பவதாரிணி மறைவு திரையுலகத்தில் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது உடல் சொந்த ஊரான தேனியில் அடக்கம் செய்யப்பட்டது.

    பவதாரிணி மறைவுக்கு திரையுலகினர், அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி டெல்லியில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டதால் அவரால் உடனடியாக சென்னைக்கு வரமுடியவில்லை.

    இந்தநிலையில் சென்னை வந்த கனிமொழி எம்.பி. தி.நகரில் உள்ள இளையராஜா வீட்டிற்கு இன்று நேரில் சென்றார். அங்கு இளையராஜா மற்றும் அவரது மகன் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவுக்கு அவர் ஆறுதல் தெரிவித்தார்.

    • திராவிட மாடல் ஆட்சி நாட்டிற்கு முன்னுதாரணமாக இருக்கிறது.
    • வட நாட்டில் உள்ள இருளை அகற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது.

    சேலம் பெத்தநாயக்கன் பாளையத்தில் நடைபெற்று வரும் திமுக இளைஞரணி மாநாட்டில் திமுக பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இளைஞர் பட்டாளம் குவிந்ததை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. இயக்கத்தின் கொடியை ஏற்றும் வாய்ப்பை எனக்கு வழங்கியதற்கு நன்றி.

    திராவிட மாடல் ஆட்சி நாட்டிற்கு முன்னுதாரணமாக இருக்கிறது.

    வட நாட்டில் உள்ள இருளை அகற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது. அந்த இருளை அகற்ற அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.

    அயோத்தி ராமர் கோவில் திறப்பிற்கு குடியரசு தலைவரை அழைக்காதது குறித்து நான் பேச விரும்பவில்லை. 

    ஒரு கோவிலை முழுமையாக கட்டி முடிக்காமல் திறக்க கூடாது என்கிறது இந்து மதம். ஆனால், இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காமல், தனது அரசியல் லாபத்திற்காக மட்டும் அவசர அவசரமாக பாஜக கோவிலை திறக்கிறது.

    இதனை தட்டிக் கேட்டால் நமக்கு ஐஸ் கொடுப்பார்கள். ஐஸ் என்பது வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை.

    விரைவில் ஒரு மாற்றம் வர வேண்டும். தமிழகத்தில் மட்டும் வந்தால் போதாது. மக்களால் தான் மாற்றத்தை நிகழ்த்த முடியும். அப்போது தான் நாட்டை காப்பாற்ற முடியும்.

    தமிழகத்தில் 40க்கு 40 வெற்றி பெற்று விடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தனக்கு கண் பார்வை பிரச்சினை இருப்பதாகவும், அதற்கு மருத்துவ சிகிச்சை வேண்டும் என்று கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை விடுத்தார்.
    • சிறுமியிடம் உனது தங்கையை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கனிமொழி எம்.பி. அறிவுரை கூறினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டாரத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கனிமொழி எம்.பி. கடந்த மாதம் 27-ல் பார்வையிட்டார். அப்போது, திருச்செந்தூர் அருகே மேலாத்தூர் சொக்கப் பழங்கரை கிராமத்தில் கண் பார்வை குறைபாடுள்ள சிறுமியை கண்ட கனிமொழி எம்.பி, அந்த சிறுமியின் அருகே சென்று கண் பார்வை குறைபாடு குறித்து விசாரித்தார். அதற்கு அந்த சிறுமி, தனது பெயர் ரேவதி என்றும் 7-ம் வகுப்பு படித்து வருவதாகவும் கூறினார். மேலும் தனக்கு கண் பார்வை பிரச்சினை இருப்பதாகவும், அதற்கு மருத்துவ சிகிச்சை வேண்டும் என்று கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை விடுத்தார். அதற்கு உடனடியாக சரி செய்து விடலாம் என சிறுமிக்கு கனிமொழி எம்.பி. நம்பிக்கையும், ஊக்கமும் அளித்தார்.

    தொடர்ந்து, கனிமொழி எம்.பி.யின் ஏற்பாட்டில் அந்த சிறுமிக்கு நெல்லையில் உள்ள ஒரு கண் மருத்துவமனையில் கடந்த 6-ந் தேதி காலை கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மாலை வீடு திரும்பினார். அதைத் தொடர்ந்து, ஏரல் தாசில்தார் கோபால கிருஷணன் சொக்கப்பழங்கரை கிராமத்துக்கு சென்று சிறுமி ரேவதியை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், கனிமொழி எம்.பி.யும் சிறுமி ரேவதியிடம் தொலைபேசியில் நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். அப்போது அந்த சிறுமிகண் அறுவை சிகிச்சைக்கு உதவியதற்கு நன்றி கூறியதுடன், தான் வளர்ந்த பிறகு மருத்துவராக பணியாற்றுவேன் எனக் கூறியிருந்தார்.

    இந்நிலையில் கனிமொழி எம்.பி.யை தனது தாய், தங்கையுடன் நேரில் சந்தித்த சிறுமி ரேவதி அவருக்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார். அப்போது சிறுமியிடம் உனது தங்கையை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கனிமொழி எம்.பி. அறிவுரை கூறினார். 

    ×