என் மலர்
இந்தியா

மக்களை பாதுகாப்பதில் பா.ஜ.க. அரசு தோல்வி அடைந்து விட்டது- கனிமொழி
- கர்னல் சோபியா குரேஷி குறித்து பேசிய பா.ஜ.க. அமைச்சர் மீது எடுத்த நடவடிக்கை என்ன?
- தமிழர்களின் பெருமை மற்றும் கலாச்சாரத்தை ஒவ்வொரு தேர்தலின்போதும் பா.ஜ.க. கண்டறிந்து விடுகிறது.
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் மக்களவையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* புல்வாமா தாக்குதல் தொடர்பான கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை.
* மும்பை தாக்குதல் நிகழ்ந்தபோது பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டார் பிரதமர்.
* பஹல்காம் தாக்குதலுக்கு யார் பொறுப்பேற்க வேண்டும்.
* விஸ்வகுரு என்று கூறிக்கொள்ளும் பிரதமர் மோடி தீவிரவாத தாக்குதலின்போது என்ன செய்தார்.
* பஹல்காம் தாக்குதலுக்கு மோடி பொறுப்பேற்றாரா?
* RAW மற்றும் உளவுத்துறை என்ன செய்து கொண்டிருந்தது.
* மக்களை பாதுகாப்பதில் பா.ஜ.க. அரசு தோல்வி அடைந்து விட்டது.
* அரசாங்கம் உங்களிடம் தான் உள்ளது. மக்களை காக்க தவறி விட்டீர்கள்.
* கேள்வி எழுப்பினாலே தேச விரோதி என முத்திரை குத்துவதா?
* அரசியல் என்ற பெயரில் நாட்டை ஏன் பிளவுபடுத்த நினைக்கிறீர்கள்.
* தேர்தலின்போது தமிழர் பெருமை பேசும் பா.ஜ.க. அரசு கீழடி அறிக்கையை ஏற்க மறுக்கிறது.
* தேர்தல் நேரத்தில் மட்டும் சோழர்கள், தமிழர்கள் மீது பாசம் ஏற்படுகிறது.
* தமிழர்களின் பெருமை மற்றும் கலாச்சாரத்தை ஒவ்வொரு தேர்தலின்போதும் பா.ஜ.க. கண்டறிந்து விடுகிறது.
* விக்ரம் மிஸ்ரி என்ற அதிகாரியை அவதூறு செய்தபோது என்ன செய்தீர்கள்.
* கர்னல் சோபியா குரேஷி குறித்து பேசிய பா.ஜ.க. அமைச்சர் மீது எடுத்த நடவடிக்கை என்ன?
* போர் நிறுத்தத்தை கொண்டு வந்தது நான் என டிரம்ப் 25 முறை கூறுகிறார்.
* இதுதான் பா.ஜ.க.வின் வெளியுறவுக் கொள்கையா?
* வெளியுறவுக் கொள்கையில் மத்திய பா.ஜ.க. அரசு சாதித்தது என்ன?
* வெளியுறவுக் கொள்கையில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டது.
* ஆணையத்தின் உதவி, சிறப்பு தீவிர திருத்தம் மூலமாக இல்லாமல் ஜனநாயகத்தின் மூலம் தேர்தல் வெற்றி இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






