search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனமழை வெள்ளம்"

    • ஓசூர் 6-வது வார்டுக்குட்பட்ட கே.சி.சி.நகர் பகுதியில் வெள்ளநீர் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது.
    • சமத்துவபுரம் பகுதியில் வீடுகளில் வெள்ளநீர் சூழ்ந்ததால் இரவு மக்கள் தவிப்புக்குள்ளானார்கள்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நேற்றிரவு கனமழை பெய்தது. 72 மி.மீ மழை பதிவான நிலையில், நகர் முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் மிகவும் அவதியடைந்தனர்.

    குறிப்பாக ஓசூர் 6-வது வார்டுக்குட்பட்ட கே.சி.சி.நகர் பகுதியில் வெள்ளநீர் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தும், அப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட பாலத்தை மூழ்கடித்ததால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்தனர்.

    இதனால் இன்று காலையில், தொழிற்சாலைகளுக்கும் அலுவலகங்களுக்கு செல்பவர்களும், பள்ளி குழந்தைகளும் மிகவும் அவதிப்பட்டனர்.

    இதையடுத்து, ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் அலுவலர்கள், மாநகராட்சி ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று தீயணைப்பு துறை வீரர்கள் ஒத்துழைப்புடன் ஜே.சி.பி எந்திரம் மூலம் வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் அருகிலுள்ள சமத்துவபுரம் பகுதியிலும் வீடுகளில் வெள்ளநீர் சூழ்ந்ததால் இரவு மக்கள் தவிப்புக்குள்ளானார்கள்.

    ×