search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கள் தவிப்பு"

    • போர் காரணமாக காசா மக்கள், உணவு, தண்ணீர் மருந்து ஆகியவை கிடைக்காமல் அவதி அடைந்து வருகிறார்கள்.
    • பாலஸ்தீன அகதிகள் முகமை அமைப்பு கூறும் போது வடக்கு காசாவில் மக்கள் தீவிர உணவு பற்றாக்குறையை எதிர் கொண்டு வருகிறார்கள்.

    காசா:

    பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தொடங்கிய போர் 4-வது மாதத்தை நெருங்கியுள்ளது.

    இதில் அப்பாவி பொதுமக்கள் உள்பட 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    போர் காரணமாக காசா மக்கள், உணவு, தண்ணீர் மருந்து ஆகியவை கிடைக்காமல் அவதி அடைந்து வருகிறார்கள். அவர்களுக்கு லாரிகள் மூலம் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டாலும் போதுமான அளவு கிடைக்கவில்லை.

    இந்நிலையில் வடக்கு காசாவில் மக்களுக்கு உணவு பொருட்கள் ஏற்றிச் சென்ற லாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகள் முகமை சார்பில் உணவு, மருந்து உள்ளிட்டவைகளை ஏற்றிச்சென்ற லாரி மீது இஸ்ரேல் கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் அந்த லாரி கடுமையாக சேத மடைந்தது. இதுகுறித்து பாலஸ்தீன அகதிகள் முகமை அமைப்பு கூறும் போது வடக்கு காசாவில் மக்கள் தீவிர உணவு பற்றாக்குறையை எதிர் கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு உணவு பொருட்களுடன் லாரி ஒன்று செல்ல காத்திருந்தது.

    அந்த லாரி மீது இஸ்ரேல் கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். மேலும் வடக்கு காசாவில் சுகாதார மருத்துவமனை ஒன்றும் அழிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான மற்றும் நிலையான மனிதாபிமான உதவிகள் காசாவின் எல்லா இடங்களிலும் அவசரமாக தேவைப்படுகிறது என்று தெரிவித்தது.

    சமீபத்தில் ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகளுக்கான முகமையை சேர்ந்த ஊழியர்கள் சிலர் ஹமாஸ் அமைப்பினருக்கு உதவுவதாக கூறி அந்த முகமைக்கு அளித்து வந்த நிதியுதவியை அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் நிறுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே காசா சிட்டியில் குவைத் ரவுண்டானா அருகே மனிதாபிமான உதவிக்காக காத்திருந்த மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக ஐ.நா. மனிதாபிமான அமைப்பு தெரிவித்துள்ளது. காசா முழுவதும் போதிய நிவாரண பொருட்கள் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகிறார்கள்.

    • பல்வேறு ஆறுகளின் கரைகள் உடைந்ததாலும் ஸ்ரீவைகுண்டம் அருகே பல பகுதிகள் தீவுகளாக காணப்படுகின்றன.
    • திருச்செந்தூர், உடன்குடி பகுதிக்கு சென்ற 10-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் தென் திருப்பேரையில் நிற்கின்றன.

    தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மிக கன மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டன. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    தாமிரபரணி ஆற்றின் வெள்ள பெருக்காலும், பல்வேறு ஆறுகளின் கரைகள் உடைந்ததாலும் ஸ்ரீவைகுண்டம் அருகே பல பகுதிகள் தீவுகளாக காணப்படுகின்றன.

    கேம்பலாபாத், நாணல் காடு மற்றும் ஆறாாம் பண்ணையில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன.

    பாதிக்கப்பட்ட மக்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பை தொடர்பு கொண்டுள்ளனர். தமிழ்நாடு அரசின் தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பு அலுவலரான அந்த அமைப்பு தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளது.

    பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு பொட்டலங்கள் வழங்கப்படுகிறது. மேலும் அவர்களை மீட்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

    சென்னையில் இருந்து நேற்று முன்தினம் திருச்செந்தூர், உடன்குடி பகுதிக்கு சென்ற 10-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் தென் திருப்பேரையில் நிற்கின்றன. வெள்ள பெருக்கால் அந்த பகுதியை விட்டு செல்ல முடியவில்லை.

    இதனால் ஆம்னி பஸ்சில் இருந்து பயணிகள் தவித்தனர். அங்குள்ள நகராட்சி சார்பில் அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. தமிழ்நாடு முஸ்லிம் முன் னேற்றக் கழக அமைப்பினர் சார்பில் அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    வெள்ளம் வடிந்த பிறகு ஆம்னி பஸ்கள் அங்கிருந்து செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கடந்த 2 நாட்களாக நிவாரணம் வழங்கப்பட்டன.

    வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ள மேலப்பாளையம், பர்கிட் மாநகரம், ஆறாம் பண்ணை, பேட்டை, கொங்கராயக்குறிச்சி,தூத்துக்குடி, நெல்லை ஜங்ஷன், பாட்ட பத்து ஜங்ஷன், செய்துங்க நல்லூர், கோயில்பத்து, மெலசெவல்,கொழுமாடை, பத்தமடை, கணேஷ்புரம், புளியங்குடி, சுசீந்தரம், ஆகிய பகுதிகளில், சுமார் 10000-க்கும் அதிகமான மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. பள்ளிவாசல்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடைக்கலம் தருதல், முதியவர்கள், கர்ப்பிணி பெண்களை மீட்டு மருத்துவமனைகளில் சேர்ப்பது, மருத்துவமனைகளில் உள்ள நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கான பிரட், பால் வழங்குவது என பல பணிகளை செய்தது.

    • மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.
    • பொருளாதார நெருக்கடியால் தவித்த மக்கள் தற்போது மின் தடையால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

    கொழும்பு:

    இலங்கை முழுவதும் மின்தடை ஏற்பட்டதால் மக்கள் கடும் அவதியடைந்தனர். மின் வினியோக பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்சார சப்ளையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

    நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது. இதனால் மக்கள் விடிய விடிய தூங்காமல் தவித்தனர். மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.

    பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சார வினியோகத்தை சீர் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கையில் மின்சார அமைப்பு தெரிவித்தது.

    பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த இலங்கை, அதிலிருந்து மீண்டு வந்தது. இதற்கிடையே இலங்கையில் மின் வினியோக பாதையில் கோளாறு காரணமாக மின்தடை ஏற்படுகிறது.

    ஏற்கனவே பொருளாதார நெருக்கடியால் தவித்த மக்கள் தற்போது மின் தடையால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

    • காலை நேரங்களில் பஸ்கள் இயக்கப்பட்டாலும் இரவு 8 மணிக்கு மேல் அரசு பஸ்கள் திண்டுக்கல்லில் இருந்து நிலக்கோட்டைக்கு இயக்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
    • இரவு 10 மணி வரை நிலக்கோ ட்டைக்கு அரசு பஸ்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சுற்றி 100க்கும் மேற்பட்ட கிரா மங்கள் உள்ளன. இப்பகு தியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவி கள் தினந்தோறும் கல்வி, வேலை வாய்ப்புக்காக திண்டுக்கல், மதுரை, பெரியகுளம், கொடைக்கா னல் உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று வருகின்றனர்.

    இந்த நகரங்களில் இருந்து தனியார் பஸ்கள் போது மான அளவு இயக்கப்பட்டு வருகிறது. காலை நேரங்க ளில் பஸ்கள் இயக்கப்பட்டா லும் இரவு 8 மணிக்குமேல் அரசு பஸ்கள் திண்டுக்கல்லி ல் இருந்து நிலக்கோட்டைக்கு இயக்கப்படவில்ைல என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    இதனால் வேலை மற்றும் வியாபாரத்திற்காக வெளியூர் செல்லும் மக்கள் அடுத்தடுத்து டவுன் பஸ்களை பிடித்து ஊருக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் அவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படுவ தோடு பண விரையமும் உண்டாகிறது. எனவே இரவு 10 மணி வரை நிலக்கோ ட்டைக்கு அரசு பஸ்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பொதுமக்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் ஏற்றுக்கொள்ள மறுத்த நபர் யாருக்கும் பொதுவான வழியாக இல்லை.
    • யாரும் இவ்வழியாக செல்லக்கூடாது என வாகனத்தை தடுத்து நிறுத்தி உள்ளார்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் பாகலஹள்ளி ஊராட்சிக்குட்பட்ட குரும்பட்டி முதல் பட்டகபட்டி செல்லும் வழி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் நிதியின் மூலம் அரசு புறம்போக்கு நிலம் மற்றும் பட்டா நிலங்களை சேர்த்து சாலை அமைக்கப்பட்டுள்ளது.

    இதில் பட்டா உரிமைதாரர்களிடம் அப்பொழுது ஊராட்சி நிர்வாகத்தின் கீழ் வழங்க அனைவரும் கையெழுத்து போட்டுள்ளனர்.

    அதனை தொடர்ந்து 15 ஆண்டு காலமாக பட்டகபட்டி, குரும்பட்டி, ஈச்சம்பட்டி உள்ளிட்ட கிராமத்திற்கு செல்லும் பொது மக்கள் அனைவரும் இந்த மண் சாலையை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இருதினங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சகாதேவன் என்பவர் டிராக்டரில் விவசாய நிலத்திற்கு மாட்டு சாணம் ஏற்றிச்சென்ற வாகனத்தை மறித்து இது எங்களது பட்டா நிலம். இதில் யாரும் வாகனங்களை இயக்க கூடாது. யாரும் இவ்வழியாக செல்லக்கூடாது என வாகனத்தை தடுத்து நிறுத்தி உள்ளார்.

    அப்பகுதி அருகாமையில் உள்ள நில உரிமைதாரர்கள் மற்றும் பொதுமக்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் ஏற்றுக்கொள்ள மறுத்த நபர் யாருக்கும் பொதுவான வழியாக இல்லை.

    யாரும் பயன்படுத்தவும் கூடாது. வாகனங்களும் இவ்வழியாக வரக்கூடாது என டிராக்டரில் இருந்த மாட்டு சாணம் லோடு முழுவதையும் சாலையிலேயே கொட்டி விட்ட பின்னர் தான் வண்டியை விட்டுள்ளார்.

    தொடர்ந்து மற்ற வாகனங்கள் செல்லக்கூடாது எனவும் மிரட்டி வருவதால் அப்பகுதி பொதுமக்கள் வேறு வழியின்றி பாகலஹள்ளி ஊராட்சி மன்ற அலுவலகம், தொப்பூர் காவல் நிலையம், நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பொதுப் பாதையை ஆக்கிரமித்து அனைவரையும் மிரட்டி வரும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்துள்ளனர்.

    மேலும் தொடர்ந்து பொதுப்பாதையை ஆக்கிரமிப்பது மட்டுமல்லாமல் மற்ற பொதுமக்களையும் மிரட்டி வரும் நபர் மீது உரிய நடவடிக்கை எடுத்து பொதுப்பாதையை தனி நபர் ஆக்கிரமிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கின்றனர்.

    • பொதுமக்கள் தங்கள் அன்றாட பணிகளை செய்ய முடியாமல் வீட்டி லேயே முடங்கியுள்ளனர்.
    • வடிகால் வசதி இல்லாததாலும், சாலையை முறையாக அமைக்காததுமே குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதற்கு காரணம் என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தருமபுரி, இரவு பகலாக விட்டு விட்டு மழை பெய்து வருவதால் பொதுமக்கள் தங்கள் அன்றாட பணிகளை செய்ய முடியாமல் வீட்டி லேயே முடங்கியுள்ளனர்.

    தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், நல்லம்பள்ளி, தொப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், பொம்மிடி, கம்பை நல்லூர், கடத்தூர் போன்ற பகுதிகளில் இன்று காலை யும் மழை பெய்து வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகிறது.

    நல்லம்பள்ளியில் நேற்றிரவு திடீரென கனமழை கொட்டியது. இதனால் பேருந்து ஸ்டாப் பகுதியில் தொப்பூர்-தருமபுரி சாலையின் பகுதியில் சாலை முழுவதும் மழை நீர் தேங்கியது. இதனால் மழைநீர் வெளியேற வழி இல்லாததால் அப்பகுதி முழுவதும் மழை நீர் சூழ்ந்திருந்தது. இதனால் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் அவதிக்குள்ளாகினர்.

    இலக்கியம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள அழகாபுரி குடியிருப்பில் சுமார் 500 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.

    தற்போது வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்த நிலையில், தொடர்ந்து 4 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால், குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்து சாலைகளில் ஆறு போல் ஓடுகிறது. மேலும் ஒரு சில வீடுகளில் மழைநீர் உட்புகுந்து விட்டதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் உள்ள நிலையில், பாம்பு போன்ற விஷஜந்துகள் வீடுகளுக்குள் புகுந்துவிடும் அபாயமும் உள்ளது. இந்த பகுதியில் சரியான வடிகால் வசதி இல்லாததாலும், சாலையை முறையாக அமைக்காததுமே குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதற்கு காரணம் என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே தேங்கியிருக்கும் மழைநீர் உடனே வடிவதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், சூளகிரி, வேப்பனப்பள்ளி, மத்தூர், ஊத்தங்கரை, சிங்காரபேட்டை, போச்சம்பள்ளி, காவேரிப்பட்டணம், ராயக்கோட்டை, தேன்கனி க்கோட்டை உள்பட மாவட்டம் முழுவதும் விடிய விடிய மழை பெய்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தருமபுரி-5மி.மீ, பாலக்கோடு-16.40மி.மீ, மாரண்டஅள்ளி- 22 மி.மீ, பென்னாகரம்- 18 மி.மீ, ஒேகனக்கல்- 20.80 மி.மீ, அரூர்-14 மி.மீ, பாப்பிரெட்டிப்பட்டி-10 மி.மீ, மழை பதிவாகியுள்ளது.

    • ஓசூர் 6-வது வார்டுக்குட்பட்ட கே.சி.சி.நகர் பகுதியில் வெள்ளநீர் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது.
    • சமத்துவபுரம் பகுதியில் வீடுகளில் வெள்ளநீர் சூழ்ந்ததால் இரவு மக்கள் தவிப்புக்குள்ளானார்கள்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நேற்றிரவு கனமழை பெய்தது. 72 மி.மீ மழை பதிவான நிலையில், நகர் முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் மிகவும் அவதியடைந்தனர்.

    குறிப்பாக ஓசூர் 6-வது வார்டுக்குட்பட்ட கே.சி.சி.நகர் பகுதியில் வெள்ளநீர் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தும், அப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட பாலத்தை மூழ்கடித்ததால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்தனர்.

    இதனால் இன்று காலையில், தொழிற்சாலைகளுக்கும் அலுவலகங்களுக்கு செல்பவர்களும், பள்ளி குழந்தைகளும் மிகவும் அவதிப்பட்டனர்.

    இதையடுத்து, ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் அலுவலர்கள், மாநகராட்சி ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று தீயணைப்பு துறை வீரர்கள் ஒத்துழைப்புடன் ஜே.சி.பி எந்திரம் மூலம் வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் அருகிலுள்ள சமத்துவபுரம் பகுதியிலும் வீடுகளில் வெள்ளநீர் சூழ்ந்ததால் இரவு மக்கள் தவிப்புக்குள்ளானார்கள்.

    ×