search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணவன் கைது"

    • தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.
    • அரூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள எல்லபுடையாம்பட்டியை சேர்ந்த லாரி ஓட்டுனர் கோபி (வயது 27). இவருக்கு ஆட்டியானூர் கிராமத்தை சேர்ந்த புஷ்பவதி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.

    இவர்களுக்கு ஒரு வயதில் இரண்டு பெண் குழந்தை உள்ள நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுபோல் ஏற்பட்ட தகராறில் கோபி தனது மனைவி புஷ்பவதியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் புஷ்பவதி தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.

    இது குறித்து அரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்து போன புஷ்பவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது கணவர் கோபியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், அரூர் காவல் துணை கண்காணிப்பாளர் பெனாசிர் பாத்திமா ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்

    இந்நிலையில் புஷ்பவதி இறந்தது குறித்து தகவல் தெரிவிக்கவில்லை என்றும் புஷ்பவதியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் கூறி அவரது உறவினர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல் நிலையம் மற்றும் அரூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • தமக்கு வளைகாப்பு செய்யும் அற்புதராஜிடம் வற்புறுத்தியுள்ளார்.
    • கடன் பிரச்சினை இருப்பதால் வளைகாப்பு நடத்த முடியாது கணவர் கூறி வந்துள்ளார்

    கடலூர்:

    விருத்தாசலம் அருகே சின்னவடவாடி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். அவரது மகன் அற்புதராஜ் (வயது 20). இவர் மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வருகிறார். இவரும் விருத்தாசலம் பெரியார் நகரை சேர்ந்த லதாவின் மகள் சக்தி(18) என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இந்நிலையில் இருவரும் நெருங்கி பழகியதால் சக்தி கர்ப்பம் அடைந்தார்.

    இதனையடுத்து இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர், கர்ப்பிணியான சக்தி, தனது தாய் லதா வீட்டில் தங்கி இருந்தார். கர்ப்பம் அடைந்த சக்தி 7 மாதங்கள் ஆகியதால் தமக்கு வளைகாப்பு செய்யும் அற்புதராஜிடம் வற்புறுத்தியுள்ளார். ஆனால் கடன் பிரச்சினை இருப்பதால் வளைகாப்பு நடத்த முடியாது கணவர் கூறி வந்துள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது.

    நேற்று மாலை தாய் வீட்டில் தனியாக சக்தி இருந்துள்ளார். வேலை முடிந்து வீட்டிற்கு வந்த அவரது தாய் லதா அங்கு சக்தி உயிரிழந்த நிலையில் முகம், கழுத்து ஆக இடங்களில் ரத்தக்காயங்களுடன் சடலமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    தகவல்அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சக்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு நடந்து வந்ததால் அவரது கணவர் அற்புதராஜை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர் தனது காதல் மனைவியை அடித்துக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த விருத்தாசலம் போலீசார் காதல் மனைவியை கொலை செய்த அற்புதராஜை கைது செய்தனர்.

    ×