search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டுமான தொழிலாளர்"

    • விருதுநகரில் 2,150 கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்.
    • கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.49லட்சத்து 8 ஆயிரத்து 679 மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார்.

    கட்டுமானத் தொழி லாளர்கள் நலவாரிய தலைவர் பொன்குமார், சீனிவாசன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு 2,150 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.49லட்சத்து 8 ஆயிரத்து 679 மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசுகையில், அமைப்பு சாரா தொழிலாளர்களின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு பதிவு செய்தல், புதுப்பித்தல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு ஏதுவாக 1.11.2008 முதல் மாவட்டங்கள் தோறும் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

    மேலும் அமைப்புச்சாரா தொழிலாளர்கள் எளிய முறையில் பதிவு செய்யவும், புதுப்பிக்கவும் மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு ஏதுவாக 15.9.2009 முதல் கணினி மயமாக்கப்பட்டன. இவ்வாறு அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்கி அவர்களின் வாழ்வில் ஒளியேற்றியதன் மூலம் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது என்றார்.

    ×