search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓய்வு பெற்ற போலீசார்"

    • சபாநாயகர் அப்பாவு பேச்சு
    • காவலர் பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட ஓய்வு பெற்ற போலீஸ் துறை அலுவலர் சங்கத்தின் 42-வது பொதுக்குழு கூட்டம் இன்று நாகர்கோவில் நடைபெற்றது.

    மாவட்ட தலைவர் மற்றும் மாநில பொதுச்செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். துணை தலைவர் சாம் நெல்சன் வரவேற்று பேசினார். நிர்வாகிகள் கிருஷ்ணபிள்ளை மாணிக்க ராவ், செல்வின் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்நாடு சட்ட பேரவை தலைவர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் போலீஸ் கிருஷ்ண ரேகா போலீஸ் துறை சார்பாக வெளிநாட்டில் நடந்த விளையாட்டு போட்டியில் பதக்கங்களை வென்றதை பாராட்டி அவருக்கு சபாநாயகர் அப்பாவு பொன்னாடை அணிவித்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    ஒய்வுபெற்ற போலீசார் பல ஆட்சியை, அரசை, பல அதிகாரிகளை பார்த்தி ருப்பீர்கள். நீங்கள் பல அனுபவங்களை பெற்றி ருப்பீர்கள். 1981-ம் ஆண்டு தான் குமரி மாவட்டத்தில் தமிழகத்திலேயே ஓய்வு பெற்றவர்களுக்கு என சங்கம் உருவாக்கப்பட்டது.தி.மு.க. ஆட்சியில் தான் போலீசாருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளது.

    ஊதிய முரண்பாடுகளை கலைந்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என்பதை நீங்கள் மறந்தி ருக்க முடியாது. பெண் போலீசாரை பணியில் அமர்த்தியதும் அவர் தான்.போலீசாருக்கு என்ன தேவை என்பதை அறிந்து பல்வேறு திட்டங்களை கருணாநிதி செயல்படுத்தி உள்ளார்.

    தற்பொழுது முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்து துறை ஊழி யர்களின் பிரச்சினைகளை அறிந்து சிறப்பாக செயல் பட்டு வருகிறார். கேட்ட திட்டங்களை மட்டும் இன்றி கேட்காமல் பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருவது தான் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி.

    போலீசாருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்க ஆணை பிறப்பித்தவர் அவர் தான் என்பதை நீங்கள் மறந்துவிட முடியாது. குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தான் தமிழகத்தில் டி.ஜி.பி. யாக இருப்பது மாவட்டத்திற்கு பெருமை ஆகும்.கோவை குண்டுவெடிப்பு வழக்கில் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்து, போலீசார் தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். 24 மணி நேரமும் போலீசார் உழைத்து வருகிறார்கள். ஓய்வு பெற்ற போலீசாரின் கோரிக்கைகள் முதல மைச்சரின் கவன த்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் மற்றும் செயலாளருமான ராஜாசிங் ஆண்டறிக்கை வாசித்தார். கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி பேரா சிரியர் ஸ்ரீ லதா மருத்துவ விழிப்புணர்வு பற்றி எடுத்துரைத்தார்.

    நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் மகேஷ், சங்க மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் துணைத்தலைவர் கிறிஸ் டோபர், மாவட்ட செயலா ளர் ஐவின், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஓய்வு பெற்ற காவலர் நல வாரியம் ஆரம்பிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது. அதை விரைந்து செயல்படு த்திட தமிழக அரசும், காவல் துறையும் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் துறையில் உள்ள தேர்வுகளில் போலீசா ரின் வாரிசுகளுக்கு 10 சதவீத உள் இட ஒதுக்கீடு ஆணையை அரசு பிறப்பிக்க வேண்டும்.

    காவலர் பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்டன.

    ×