search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓமன் நாட்டு சிறை"

    • ஓமன் நாட்டு சிறையில் வாடும் கணவரை மீட்டு தரவேண்டும்.
    • கலெக்டரிடம் மனைவி மனு அளித்தார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் வீரசிங்கம். இவரது மனைவி கண்மணி. இவர் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரனி டம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    எனது கணவர் வீரசிங்கம் (வயது39). ஓமன் நாட்டில் மீன்பிடி தொழில் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு அரபு முதலாளியிடம் 6 மாத வேலை செய்தார். அவர் எனது கணவருக்கு சம்பளமும் எதுவும் கொடுக்காததால் நாங்கள் இந்தியாவில் இருந்து பணம் அனுப்பி அவர் சொந்த ஊருக்கு வர ஏற்பாடு செய்தோம்.

    தொடர்ந்து எனது கணவர் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதத் தில் ஓமன் நாட்டில் மீன்பிடி வேலைக்கு சேர்ந்தார். இந்நிலையில் கடந்த மார்ச் 12-ந்தேதி ஓமன் நாட்டில் இருந்து விடுமுறைக்காக இந்தியா புறப்பட்டார்.

    அப்போது எனது கண வரின் முன்னாள் முதலாளி கொடுத்த புகாரின்பேரில் ஓமன் ஏர்போர்ட்டில் ஓமன் போலீசார் அவரை கைது செய்ததாக ஊர் திரும்பிய அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து தற்ேபாது வேலை பார்க்கும் முதலாளியை தொடர்பு கொண்டோம். அவரும் எனது கணவரை சிறையில் இருந்து மீட்டு இந்தியாவிற்கு அனுப்பி வைப்பதாக உறுதி கூறினார். ஆனால் மாதங்கள் பல கடந்த பின்னரும் கணவரை மீட்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரை மீண்டும் தொடர்பு கொண்ட போது அலட்சியமாக பதில் அளித்தார்.

    எங்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். எனவே எங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு எனது கணவரை இந்தியா மீட்டு வர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×