search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏட்டு மரணம்"

    • உத்தமபாளையம் ஏ.எஸ்.பி மதுகுமாரி இரவு நேர ரோந்து பணிக்காக அபுகனி டிரைவராக சென்றார்.
    • கூடலூர் தெற்கு போலீசில் பணிபுரிந்த கிட்டுராஜன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பணியின் போதே உயிரிழந்தார்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்தவர் அபுகனி(40). இவரது மனைவி ஷகிலாபேகம். இவர்களுக்கு ஒரு மகள், 3 மகன்கள் உள்ளனர். ஷகிலாபேகம் குமுளிபகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

    அபுகனி கூடலூர் தெற்கு போலீசில் ஏட்டாக வேலைபார்த்து வந்தார். இதனால் அவர்கள் குடும்பத்துடன் குமுளி அருகே உள்ள தாமரைக்கண்டம் பகுதியில் வசித்து வந்தனர்.

    இந்தநிலையில் உத்தமபாளையம் ஏ.எஸ்.பி மதுகுமாரி இரவு நேர ரோந்து பணிக்காக அபுகனி டிரைவராக சென்றார். நள்ளிரவு 12 மணியளவில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற போலீசார் அவரை மீட்டு உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    கூடலூர் தெற்கு போலீசில் பணிபுரிந்த கிட்டுராஜன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பணியின் போதே உயிரிழந்தார். இதேபோல் பிரபு என்ற போலீஸ்காரர் 2 மாதத்திற்கு முன்பு உயிரிழந்தார். தொடர்ந்து 3 மரணங்கள் ஏற்பட்டுள்ளதால் போலீசார் பீதி அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், பொதுவாகவே போலீசாருக்கு பணிச்சுமை அதிகம். சில இடங்களில் பணியிடங்கள் காலியாக உள்ளது நிரப்பபடவில்லை. போலீசார் பற்றாக்குறையால் அவர்களுக்கு மேலும் பணிச்சுமை ஏற்படுகிறது. இதன்காரணமாக மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். பெரும்பாலும் விடுமுறை எடுக்க முடியாததால் குடும்பத்திலும் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது.

    இதன் காரணமாகவே உடல்நலக்குறைவு ஏற்பட்டு திடீர் மரணங்கள் நிகழ்கிறது. எனவே போலீசாருக்கு மனநல ஆலோசனை மற்றும் போதிய அளவு ஓய்வு வழங்கவேண்டும் என்றனர்.

    • ஜெயச்சந்திரனை மேல் சிகிச்சைக்காக சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
    • சிகிச்சை பெற்று வந்த ஜெயச்சந்திரன், இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    சேலம்:

    சேலம் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையில் ஏட்டாக பணியாற்றி வந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 49).

    இவர் நேற்று அதிகாலை 2 மணி அளவில் பணியில் இருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்த காவலர்கள் உடனடியாக அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஜெயச்சந்திரன், இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இவரது மனைவி காயத்ரி சேலம் மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    இந்த தம்பதிக்கு ஜெயசூர்யா என்ற மகனும், சினேகா என்ற மகளும் உள்ளனர். ஜெயச்சந்திரன் கடந்த 1999-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×