search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எஸ் ஜெயசங்கர்"

    • அபுதாபியின் முதல் இந்து கோயிலின் இடத்தை அமைச்சர் ஜெய்சங்கர் பார்வையிட்டார்
    • இந்த கோயில் 55,000 சதுர மீட்டர் நிலப்பரப்பில் கட்டப்படுகிறது.

    அபுதாபி:

    இந்திய வெளியுறவுத் துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் 3 நாள் பயணமாக வளைகுடா நாட்டிற்கு நேற்று சென்றார். அங்கு அபுதாபியில் கட்டப்பட்டு வரும் இந்து கோயிலின் முதல் இடத்தைப் பார்வையிட்டார். கோயிலைக் கட்டுவதில் இந்தியர்களின் முயற்சிகளையும் பாராட்டினார்.

    இதுதொடர்பாக ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், விநாயக சதுர்த்தி அன்று அபுதாபியில் கட்டப்பட்டு வரும் இந்துக் கோயிலுக்குச் சென்றதற்கு ஆசீர்வதிக்கப்பட்டேன். விரைவான முன்னேற்றத்தைக் கண்டு மகிழ்ச்சியடைந்து, சம்பந்தப்பட்ட அனைவரின் பக்தியையும் ஆழ்ந்து பாராட்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.

    மேலும், அந்நாட்டு வெளியுறவு மந்திரி ஷேக் அப்துல்லா பின் சயீத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் மந்திரி ஜெய்சங்கர், இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

    அபுதாபியில் அமையவுள்ள இந்தக் கோயில் சுமார் 55,000 சதுர மீட்டர் நிலப்பரப்பில் கட்டப்படும். இந்திய கோவில் கைவினைஞர்களால் பணிகள் நடைபெற உள்ளன. மத்திய கிழக்கின் முதல் பாரம்பரிய இந்துக் கற்கோயில் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×