search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எக்ஸ்பிரஸ் ரெயிலில்"

    • பரிதவித்த பெண்கள்-மாற்றுத்திறனாளி
    • பஸ் பயணத்தை விட ரெயில் பயணத்தை அதிகளவு விரும்புகிறார்கள்.

    நாகர்கோவில்:பெண்கள் பஸ் பயணத்தை விட ரெயில் பயணத்தை அதிகளவு விரும்புகிறார்கள். அதற்கு முக்கிய காரணமாக விளங்குவது அதில் அவர்களுக்கு பாதுகாப்பாக பயணம் செய்ய பெட்டிகள் ஒதுக்கீடு செய்வதே ஆகும்.எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெண்களுக்கு தனி பெட்டிகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ரெயிலின் முன் பகுதியிலும், பின்பகுதியிலும் தனியாக ஒரு பெட்டிகள் இணைக்கப்படுகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு என ரெயிலின் பின்பகுதியில் பெட்டிகள் உள்ளது. இந்த பெட்டிகளில் மாற்றுத்திறனாளிகளுடன் அவரது பாதுகாவலர்களும் பயணம் செய்து கொள்ளலாம். அனைத்து ரெயில்களிலும் பெண்களுக்கு என ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் எப்பொழுதுமே கூட்டம் அதிகமாக காணப்படும்.சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த சிறப்பு ரெயிலிலும் பெண்களுக்கான ஒதுக்கீடு செய்த பெட்டியில் கூட்டம் அதிகமாக இருந்தது. ரெயில் இன்று காலை 7 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு வந்தது. 2-வது பிளாட்பாரத்தில் ரெயில் நிறுத்தப்பட்டது. அப்போது ரெயிலில் இருந்து பயணிகள் இறங்கினார்கள். ஆனால் ரெயிலின் பின் பெட்டி அதாவது மாற்றுத்திறனாளிகளுக்கு என ஒதுக்கப் பட்ட பெட்டி பிளாட்பாரத்திற்கு முழுமையாக வராமல் வெளியே இருந்தது.இதனால் அதிலிருந்து மாற்றுத்திறனாளிகள் பெட்டியை விட்டு இறங்க முடியாமல் அவதிக்குள்ளானார்கள். மாற்றுத்திறனாளிகளை அவர்களுக்கு உதவியாக வந்தவர்கள் கீழே இறக்கி விட்டனர். அவர்கள் ரெயில் பெட்டியலிருந்து பிளாட்பாரத்தில் இறங்க முடியாததால் ரெயில்வே தண்டவாளத்தில் இறங்கி பிளாட்பாரத்திற்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டது. அதில் இருந்த பெண்கள் ரெயில் பெட்டியில் இருந்து குதித்து இறங்கி சென்றனர். முதியவர்களும் ரெயில் பெட்டியை விட்டு இறங்க முடியாமல் தவித்தனர். சிறுவர்கள், சிறுமிகளும் ரெயில் பெட்டியில் இருந்து இறங்க முடியாமல் அவதிப்பட்டனர். அவர்களை அவரது பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் பெட்டியில் இருந்து கீழே இறக்கி விட்ட னர்.பிளாட்பாரத்தை விட்டு ரெயில் வெளியே நிற்பதற்கு மிக முக்கிய காரணம் இந்த ரெயிலில் அதிக பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது காரணம் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். 2-வது பிளாட்பாரம் மற்ற பிளாட்பாரங்களை விட நீளம் குறைவானதாகும். எனவே தான் ரெயில் வெளியே நின்றதாக கூறினார்கள்.இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் ரெயில்வே அதிகாரிகள் நீளம் அதிகம் உள்ள ரெயில்களை முதலாவது பிளாட்பாரத்தில் நிறுத்தி பயணிகள் இறங்கு வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ள னர்.பெங்களூர்-நாகர்கோவில் ரெயிலும் அவ்வப்போது 2-வது பிளாட்பாரத்தில் நிறுத்தப்படும் போது இதேபோன்று சம்பவங்கள் நடைபெறு வதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே ரெயில்வே அதிகாரிகள் இதில் தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை யாக உள்ளது.

    ×