search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊழியர்கள் தர்ணா"

    • வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்தது
    • கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம் இன்று நடந்தது.

    சத்துணவு ஊழியர்

    போராட்டத்திற்கு மாவட்ட தலைவர்கள் சீனிவாசன், பியூலா எலிசபெத் ராணி, சேகரன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட அமைப்பு தலைவர் சரவண ராஜ், மாநில செயலாளர் மோகன மூர்த்தி, மாநில பொதுச் செயலாளர் ராஜாமணி, மாவட்ட அமைப்பு செயலாளர் வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் துவக்க உரையாற்றினர்.மாநில செயலாளர் ஜெயந்தி சிறப்பு உரையாற்றினார்

    தர்ணாவில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    • மின்சார சட்ட சீர்திருத்தத்தை கைவிடக்கோரி நடந்தது
    • அனைத்து தொழிற்சங்க ஊழியர்கள் பங்கேற்றனர்

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் சைதாப்பேட்டையில் இயங்கி வரும் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலக வளாகம் எதிரில் மத்திய அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யபடும் மின்சார சட்ட சீர்திருத்தம் 2022-ஐ கைவிட கோரி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மின்வாரிய தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

    மின்சார வாரிய சட்டத்திருத்தம் மசோதா நிறைவேறி தனியார் மயமாக்கல் ஏற்பட்டால் விவசாயிகளுக்கு வழங்க கூடிய மின்சாரம் விசை தறி நெசவாளர்கள் பொதுமக்களுக்கு வழங்க கூடிய 100 யூனிட் மின்சாரம் அடியோடு ரத்து செய்து அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கபடுவார்கள் என்று இந்த தர்ணா பேராட்டத்தில் எடுத்துரைக்கபட்டது.

    மேலும் மின்சார வாரிய சட்ட சீர்திருத்தம் 2022-ஐ மத்திய அரசு கைவிட கோரி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.

    மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கும் சட்டம் நிறைவேற்றபட்டால் நாடு தழுவிய போராட்டத்தில் மின்சார வாரிய தொழிலாளர்கள் ஈடுபடுவார்கள் என மின்சார வாரிய ஊழியர்கள் தெரிவித்தனர். இதில் சிஐடியூ உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கத்தை சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் பங்கேற்றனர்.

    திருவண்ணாமலை மின் கோட்டம் கிழக்கு பகுதிகளில் உள்ள கீழ்பென்னாத்தூர் வடக்கு மற்றும்தெற்கு, சோமாசிபாடி, மேக்களூர் துணை மின்வாரிய அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்து தொழிற்சங்கத்தினர்கள் ஒன்றிணைந்து, கீழ்பென்னாத்தூர் துணை மின்நிலையம் எதிரில் பணிபுறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    அனைத்து மின்துறை பொறியாளர்கள் தொழிற்சங்க நிர்வாகிகள், ஊழியர்கள் பணி புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

    • நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் தர்ணா நடைபெற்றது.
    • தனியார் பராமரிப்புக்கு வழங்குவதை எதிர்த்து

    கரூர்:

    நெடுஞ்சாலைதுறை சாலைகளை தனியார் பராமரிப்புக்கு வழங்குவதை எதிர்த்து தமிழ்நாடு நெடுஞ்சாலைதுறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கத்தினர் கரூரில் தர்ணாவில் ஈடுபட்டனர்.நெடுஞ்சாலைத்துறையில் உள்ள சாலைகளை பேக்கேஜ் உள்ளிட்ட திட்டங்களில் தனியார் பராமரிப்புக்கு வழங்கப்படுவதை கைவிடவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில் மாவட்டத்தலைவர் கி.ஞானசேகரன் தலைமையில் கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா நடைபெற்றது.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரா.தாமோதரன் தொடக்க உரையாற்றினார். பராமரிப்பு ஊழியர்கள் சங்க மாநில துணைத்தலைவர் குப்புச்சாமி சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் எஸ்.சந்திசேகரன் கோரிக்கை விளக்க உரையாற்றினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில து ணைத்தலைவர்ம காவிஷ்ணன் நிறைவுரையாற்றினார். மாவட்ட துணைத்தலைவர் சிங்கராயர் வரவேற்றார். மாவட்டப்பொருளாளர் எஸ்.வெங்கடேஸ்வரன் நன்றி கூறினார்.தர்ணாவில், நெடுஞ்சாலைதுறையில் உள்ள சாலைகளை பேக்கேஜ் உள்ளிட்ட திட்டங்களில் தனியார் பராமரிப்புக்கு வழங்கப்படுவதை கைவிட வேண்டும். 41 மாத பணி நீக்க காலத்தை பணி ஓய்விற்க்கு பின்பு, பணிக்கொடைக்கும், ஓய்வூதிய பலன்களுக்கும் பொருந்தக்கூடிய வகையில் அரசாணை வெளியிட வேண்டும். பணி நீக்க காலத்தில் இறந்த சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் விதிமுறைகளை தளர்த்தி பணி நியமனம் வழங்க வேண்டும். சாலைகளை பராமரிக்க 5 கி.மீட்டருக்கு 2 சாலை பணியாளர்கள் என பணியிட ஒப்புதல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.


    ×