search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊழியர் படுகாயம்"

    • பள்ளி சத்துணவு கூட கட்டிடத்தின் மேல் பகுதியில் இருந்த சிமெண்ட் காரைகள் திடீரென்று பெயர்ந்து சாந்தி தலையில் விழுந்தது.
    • புதிய சத்துணவு கூடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த பாலூர் சன்னியாசி பேட்டையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.

    இப்பள்ளி வளாகத்தில் சத்துணவு கூடம் இருந்து வருகிறது. இங்கு அதே பகுதியை சேர்ந்த சாந்தி (வயது 55) என்பவர் சத்துணவு ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இன்று காலை சத்துணவு கூடத்தில் ஊழியர் சாந்தி மாணவர்களுக்கு சமைத்துக் கொண்டு இருந்தார். அப்போது கட்டிடத்தின் மேல் பகுதியில் இருந்த சிமெண்ட் காரைகள் திடீரென்று பெயர்ந்து சாந்தி தலையில் விழுந்தது. அப்போது சாந்தி கதறி துடித்தார்.

    இந்த சத்தம் கேட்ட ஆசிரியர்கள் சத்துணவு கூட்டத்திற்கு சென்று பார்த்தபோது சாந்தி துடிதுடித்துக் கொண்டிருந்தார். அவரை உடனடியாக மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர்கள் அந்த நேரத்தில் யாரும் உள்ளே செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

    இந்த சத்துணவு கூடத்தை உடனடியாக இடித்து புதிய சத்துணவு கூடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

    • திடீரென எதிர்பாராத விதமாக கொசுமருந்து தெளிக்கும் எந்திரம் வெடித்து சிதறியது.
    • வெங்கடாசலபதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் கட்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலபதி (வயது 24). இவர் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் 2-வது வார்டுக்குட்பட்ட செல்ல பெருமான் நகரில் வெங்கடாசலபதி பேட்டரி வாகனத்தில் கொசு மருந்து தெளிக்கும் எந்திரத்தின் மூலம் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக கொசுமருந்து தெளிக்கும் எந்திரம் வெடித்து சிதறியது.

    இதில் பணியில் ஈடுபட்டிருந்த வெங்கடாசலபதிக்கு முகம், கழுத்து உடல் உள்ளிட்ட இடங்களில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. மேலும் இந்த விபத்தில் பேட்டரி வாகனமும் தீப்பிடித்து எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் எரிந்துகொண்டு இருந்த வாகனத்தை மண்ணை தூவி தீயை அணைத்தனர். பின்னர் விபத்தில் படுகாயம் அடைந்த வெங்கடாசலபதியை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அங்கு வெங்கடாசலபதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    ×