search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக்கையை நிறுத்தி கணித்த கிராம மக்கள்"

    • திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் சூரிய கிரகணத்தின்போது மேகம் சூழ்ந்திருந்தது.
    • பண்டைய காலத்தில் நம் முன்னோர்கள் கிரகணத்தின்போது உலக்கையை உரல் மீது நிறுத்தி வைப்பார்கள். கிரகணம் நடைபெறும் நேரத்தில் அந்த உலக்கை கீழே விழுகாமல் நேராக நிற்கும்.

    வடமதுரை:

    சூரிய கிரகணம் நேற்று மாலை 4.29 மணியிலிருந்து 5.48 மணிவரை நடைபெற்றது. இதனை வெறும் கண்களால் பார்த்தால் பாதிப்பு ஏற்படும் என்பதால் பல்வேறு பகுதிகளில் கண்ணாடி அணிந்து பொதுமக்கள் பார்த்தனர்.

    கொடைக்கானலில் மேகமூட்டம் இருந்ததால் கிரகணம் தெரியவில்லை. இதேபோல் திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் சூரிய கிரகணத்தின்போது மேகம் சூழ்ந்திருந்தது. பண்டைய காலத்தில் நம் முன்னோர்கள் கிரகணத்தின்போது உலக்கையை உரல் மீது நிறுத்தி வைப்பார்கள். கிரகணம் நடைபெறும் நேரத்தில் அந்த உலக்கை கீழே விழுகாமல் நேராக நிற்கும்.

    தற்போதும் பெரும்பாலான கிராமங்களில் இந்த முறையில் கணித்து வருகின்றனர். நேற்று கிரணகத்தின்போது எரியோடு அருகே தொட்டணம்பட்டியை சேர்ந்த விவசாயி சிவா(32) தனது விளைநிலத்தில் நெல்குத்தும் உரல் மீது உலக்கையை நிற்க வைத்தார். அது கிரகணம் முடியும் வரை நேராக நின்றது.

    இதேபோல் திண்டுக்கல்லில் பல வீடுகளில் உலக்கையை நிறுத்தி வைத்தனர். இந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. மாறி வரும் விஞ்ஞான உலகில் நமது முன்னோர்களின் பாரம்பரியத்தையும் பின்பற்ற வேண்டும். தொழில்நுட்ப வசதி இல்லாத காலத்தில் சூரிய கிரகணம் கோள்களின் இயக்கம் ஆகியவற்றை சிற்பம் மூலம் வெளிப்படுத்தினர்.

    எனவே நாமும் அதை பின்பற்ற வேண்டும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.

    ×