search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக மா ணவர் தின விழா"

    • கல்விக்குழுமங்களின் பொருளாளர் லதாகார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.
    • முன்னதாக பள்ளியின் முதல்வர் பிரமோதினி வரவேற்றார்.

    திருப்பூர்:

    திருப்பூர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் உலக மாணவர் தின விழா கொண்டாடப்பட்டது.ஏ.வி.பி. சிபிஎஸ்சி., பள்ளியின் கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஏ.வி.பி. கல்விக்குழுமங்களின் தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமையேற்று தலைமையுரை ஆற்றினார். கல்விக்குழுமங்களின் பொருளாளர் லதாகார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு விருந்தினராக நகைச்சுவை பட்டிமன்றப் பேச்சாளர் சாந்தாமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடையே கனவுமெய்ப்படும் என்னும் தலைப்பில் மாணவர்களை ஊக்கப்படுத்தியும், சிரிப்போடு கூடிய சிந்தனையை தூண்டியும் சிறப்புரை ஆற்றினார்.

    வனத்துக்குள் திருப்பூர் அமைப்பினருடன் இணைந்து முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பிறந்தநாளில் ஏ.வி.பி.கல்விக் குழுமங்களில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆண்டு தோறும் 10000 மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருவது வழக்கம். இந்த ஆண்டும் சுமார் 10,200 க்கும் அதிகமான மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை ஏ.வி.பி. கல்விக் குழுமங்களின் சார்பில் 100000-க்கும் அதிகமான மரங்களை வழங்கி பசுமைத்தாயகத்திற்கு அடிகோலிய ஏ.வி.பி. கல்விக்குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் அருள்ஜோதியின் சமூகப்பணியினை பாராட்டியும் ஏவுகணைநாயகனின் கனவினை நனவாக்குவதற்காகவும் ஏ.வி.பி.நாயகன் என்னும் விருது வழங்கப்பட்டது.

    முன்னதாக பள்ளியின் முதல்வர் பிரமோதினி வரவேற்றார். மாணவி அதுல்யா சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். முடிவில் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் மோகனா நன்றி கூறினார்.இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் மாணவர் மன்றத்தினர் செய்திருந்தனர். 

    ×