search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக சுகாதார தினம்"

    • உலக சுகாதார தினத்தையொட்டி சிவகங்கை கோர்ட்டில் மருத்துவ முகாம் நடந்தது.
    • இந்த முகாமை மாவட்ட முதன்மை நீதிபதி தொடங்கி வைத்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இதை தலைவர் மற்றும் மாவட்ட முதன்மை சுமதி சாய் பிரியா தொடங்கிவைத்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    இன்றைக்கு பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகிறோம். நோய் வரும் முன்பு பாதுகாத்துக் கொள்ளவேண்டும். உடல்நலம், மனநலம் பாதுகாக்கப்பட வேண்டும். மனநல பாதிப்பு என்பது முக்கியமானதாகும். மனநல பாதிப்பில் இருந்து காத்துக்கொள்ள யோகா மற்றும் மருத்துவர்களின் ஆலோசனைகளின்படி மன அழுத்தத்தை குறைத்து ஆரோக்கியமாக வாழவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூடுதல் மாவட்ட நீதிபதி சத்தியதாரா, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பக்தவச்சலு, குடும்ப நல நீதிபதி முத்துக்குமரன், போக்சோ நீதிபதி சரத்ராஜ், தலைமை குற்றவியல் நீதிதுறை நடுவர் சுதாகர், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர்- சார்பு நீதிபதி பரமேசுவரி, மாவட்ட உரிமையியல் நீதிபதி இனியா கருணாகரன், கூடுதல் மகிளா நீதிபதி ஆப்ரின்பேகம், குற்றவியல் நீதிதுறை நடுவர் அனிதா கிறிஸ்டி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் பிரபாகரன், டாக்டர்கள் சங்கரலிங்கம், பாலஅபிராமி காந்திநாதன், ஓமியோபதி மருத்துவர் கவுசல்யா, யோகா மருத்துவர் தங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    வழக்கறிஞர்கள், வழக்காடிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டனர்.

    சுகாதாரதுறையின் மூலம் அலோபதி மருத்துவம், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்க்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துவ அறிவுரைகள் மருத்துவர்களால் வழங்கப்பட்டது. மருந்து, மாத்திரைகள், கபசுர குடிநீர், சித்தா ஓமியோபதி மாத்திரைகள், மருந்துகளும் வழங்கப்பட்டது.

    ×