search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உரிமை திட்டம் முகாம்"

    • குமரியில் இன்று 400 இடங்களில் தொடங்கியது
    • விண்ணப்ப படிவங்களை சரிபார்த்து அதிகாரிகள் வாங்கினார்கள்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம் 2 கட்டமாக நடக்கிறது. இதையடுத்து முதல் கட்டமாக முகாம் நடைபெற உள்ள 400 ரேஷன் கடைகளுக்குட்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்கள் மற்றும் டோக்கன்கள் ஊழியர்கள் மூலமாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு வீடு வீடாக சென்று வழங்கப்பட்டது.

    400 ரேஷன் கடைகளுக்குட்பட்ட சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு இந்த விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து இன்று 24-ந்தேதி முதல் விண்ணப்ப படிவங்கள் பொதுமக்களிடமிருந்து வாங்கப்பட்டது. அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம் தாலுகாவுக்குட்பட்ட 400 இடங்களில் சிறப்பு முகாம் நடந்தது.

    நாகர்கோவில் மாநகர பகுதிகளிலும் கலைஞர் உரிமை திட்டத்திற்கான சிறப்பு முகாம் இன்று நடந்தது. ஏற்கனவே விண்ணப்ப படிவங்கள் கொடுக்கப்பட்ட நிலையில் பெண்கள் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து கொண்டு வந்திருந்தனர்.

    முகாமில் இருந்த அதிகாரிகள் விண்ணப்ப படிவங்களை பரிசோதித்து பெற்றுக்கொண்டனர். விண்ணப்பம் முகாமில் விண்ணப்பங்களை ஒப்படைக்க வந்த பொதுமக்கள் தங்களது விண்ணப்பங்களு டன் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு இணைக்கப்பட்ட வங்கி புத்தகம் மற்றும் மின் கட்டண கார்டு ஆகியவற்றை இணைத்திருந்தனர்.

    விண்ணப்ப பதிவு முகாம்களில் காலை முதலே கூட்டம் அலைமோதியது. பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. விண்ணப்ப முகாம்களை பூர்த்தி செய்து வந்திருந்த பொதுமக்கள் சிலர் வங்கி புத்தகத்துடன் ஆதார் கார்டு இணைக்காத வங்கி கணக்கை கொண்டு வந்திருந்தனர்.

    இதைத்தொடர்ந்து அதை பரிசோதித்து அதிகாரிகள் அதை சரி செய்து கொண்டு வருமாறு அனுப்பி வைத்தனர். பின்னர் அதை சரி செய்து பொதுமக்கள் கொண்டு வந்தனர்.

    அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம் தாலுகாவுக்குட்பட்ட பகுதியில் உள்ள கிராமப்புறங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஒவ்வொரு முகாமிலும் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து கொண்டு வந்திருந்தனர்.

    ஒரு சில இடங்களில் பெண்கள் அதிகமாக திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விண்ணப்ப படிவங்களை வழங்க வந்த பொதுமக்களிடம் ஊழியர்கள் விண்ணப்ப படிவங்களை சரிபார்த்து வாங்கினார்கள். இன்று தொடங்கிய முகாம் வருகிற 4-ந்தேதி வரை நடக்கிறது.

    இதைத்தொடர்ந்து 2-ம் கட்டமாக 384 ரேஷன் கடையில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு கலைஞர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த விண்ணப்ப படிவுகளை பூர்த்தி செய்து ஆகஸ்ட் 5-ந்தேதி முதல் 16-ந்தேதிக்குள் அந்த பகுதியில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் வழங்க வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    ×