search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உப்பு நிறுவனம்"

    • வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தில் அமைச்சர்கள் திடீர் ஆய்வு செய்தனர்.
    • 1,500-க்கும் மேற்பட்ட பருவகால தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:-

    தமிழக அரசின் நேரடி நிர்வாகம் மூலம் வாலி நோக்கத்தில் 1974-ம் ஆண்டு தமிழ்நாடு உப்பு நிறுவனம் தொடங்கப்பட்டது. வணிக ரீதியாக 1978-ம் ஆண்டு முதல் சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சுமார் 5,236 ஏக்கர் நிலப்பரப்பளவில் செயல்படுகின்றன.

    1,500-க்கும் மேற்பட்ட பருவகால தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் முதல்வர் உத்தரவுக்கிணங்க சட்ட மன்றத்தில் அறிவித்த படி அயோடின் கலந்த கல் உப்பு மற்றும் சுத்திக ரிக்கப்பட்ட அயோடின் கலந்த தூள் உப்பு ஆகியவற்றை நெய்தல் உப்பு என்ற வணிகப் பெயரில் வெளிச்சந்தையில் உற்பத்தி செய்திட ஏதுவாக முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.

    இதுவரை 25 டன் நெய்தல் உப்பு விற்பனை செய்யப்பட்டுள்ளது மேலும் அயோடின் செரியூட்டப்பட்ட உப்பு மற்றும் இருவித செரியூட்டப்பட்ட உப்பினை பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    இப்பகுதியில் வேலை வாய்ப்பு அதிகரிக்க தேவையான உட் கட்ட மைப்புகளை மேம்படுத்த மாவட்ட கலெக்டர் மூலம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் இப்பகுதியில் பொதுமக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ஆய்வின்போது உப்பு நிறுவன நிர்வாக இயக்குநர் ராஜாமணி, மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் வேலுச்சாமி, மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், தமிழ்நாடு அரசு நிறுவன தனி அலுவலர் தில்லி குமார், திட்ட மேலாளர் விஜயன், துணை மேலாளர்கள் ராமகிருஷ்ணன், வெங்கடேசன், முத்து செல்வன், மேலக்கிடாரம் ஒன்றிய கவுன்சிலர் பார்வதி, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ஜெயபாலன், ஆப்பனூர் ஆறுமுகவேல், குலாம் முகைதீன் அமைச்சரின் நேர்முக உதவியாளர் கண்ணன், முதுகுளத்தூர் சட்டமன்ற அலுவலக அலுவலர்கள் சத்தியேந்திரன், டோனி சார்லஸ், ரஞ்சித் மணிகண்டன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    ×