search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம்"

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
    • தி.மு.க. அரசு அனைத்திற்கும் மத்திய அரசு தான் காரணம் என பழி சுமத்தி வருகிறது.

    நாகர்கோவில்:

    குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண் ணாவின் 114-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நேற்று நாகர்கோவிலில் நடந்தது. கிழக்கு பகுதி செயலாளர் ஜெயகோபால் தலைமை தாங்கினார். கவுன்சிலர் அக்சயா கண்ணன் வரவேற்றார். கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ராஜாராம், தெற்கு பகுதி செயலா ளர் முருகேஷ்வரன், மாவட்ட அண்ணா தொழிற் சங்க செயலாளர் சுகுமாரன், கவுன்சிலர் அனிலா சுகுமாரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாகர்கோவிலில் பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டு வந்தது, மாநக ராட்சியாக தரம் உயர்த்தி யது அ.தி.மு.க. ஆட்சியில் தான். நாகர்கோவில் மாநக ராட்சி பகுதியில் பல ஆண் டுகளுக்கு முன்பாக கட்டப் பட்ட பழமையான வீடுகள் மழையின் காரணமாக சேதமடைந்துள்ளது. இந்த வீடுகளை மீண்டும் கட்டுவ தற்கு கட்டிட வரைபட அனுமதிகோரி விண்ணப் பிக்கும் பொதுமக்களுக்கு கட்டிட வரைபட அனுமதி வழங்காமல் மாநகராட்சி நிர்வாகம் மறுத்து வருகிறது. இதனால் பழைய வீடுகளை புதுப்பிக்க விரும்பும் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள் ளார்கள்.

    ஆட்சியின் குறையை வெளியே தெரியாமல் மறைக்க தி.மு.க. அரசு அனைத்திற்கும் மத்திய அரசு தான் காரணம் என பழி சுமத்தி வருகிறது. தாலிக்கு தங்கம், மகளிருக்கு ஸ்கூட்டர், இலவச மடிக்க ணினி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்தி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் பச் சைமால், அனைத்துலகஎம். ஜி.ஆர். மன்ற இணைச்செய லாளர் வேலாயுதம், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், தலை மைக்கழக பேச்சாளர் முரு கானந்தம், எம்.ஜி.ஆர்.மன்ற இணைச்செயலாளர் கிருஷ்ணதாஸ், இளைஞர் அணிஇணைச்செயலாளர் சிவசெல்வராஜன் ஆகி யோர் வாழ்த்தி பேசினர்.

    இதில் இணைச்செயலா ளர் சாந்தினி பகவதியப்பன், ஒன்றிய செயலாளர்கள் ஜெஸிம், மகராஜன் பிள்ளை மற்றும் விவசாய அணி மாவட்ட தலைவர் வடிவை மாதவன், ஆரல்வாய்மொழி பேரூர் செயலாளர் முத்துக் குமார், தோவாளை வடக்கு ஒன்றிய செயலாளர் பொன்.சுந்தர்நாத், மாநகராட்சி கவுன்சிலர் ஸ்ரீலிஜா, மாவட்ட பஞ்சாயத்து கவுன் சிலர் நீலபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×