search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரத்தின லிங்கேஸ்வரர் கோவில்"

    • கடவுள்கள் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.
    • விசேஷ பூஜைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை நகரம் தில்லை நகரில் இரத்னாம்பி கை உடனமர் இரத்தினலிங்கேஸ்வரர் திருக்கோயில் உள்ளது.

    நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் விநாயகர், முருகன், பிரம்மா, துர்க்கைஅம்மன், ஆழ்வார்கள், ஐயப்பசாமி, கால பைரவர், நவக்கிரகங்கள், அஷ்டதிக் நாகர்கள் ஆகிய கடவுள்கள் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். இங்கு பிரதோஷம், கிருத்திகை, மஹாசிவராத்திரி, சங்க டஹர சதுர்த்தி , அமாவாசை பவுர்ணமி உள்ளிட்ட நாட்களில் விசேஷ பூஜைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. உடுமலை நகரம் மட்டுமின்றி சுற்றுப்புற கிராமங்களில் உள்ள பொதுமக்களும் கோவிலுக்கு வந்து நாள்தோறும் சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். ஐப்பசி மாத பௌர்ணமி யை யொட்டி மூலவர் நந்தி உள்ளிட்ட கடவுள்களுக்கு அன்னாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.முன்னதாக சந்தனம்,திருமஞ்சனம், பஞ்சாமிர்தம்,பால்,மஞ்சல்,இளநீர்,பழரசம்,தேன்,பஞ்சாமிர்தம்,பன்னீர், கரும்புச்சர்க்கரை, சந்தனாதி தைலம் உள்ளிட்ட 16 வகையானதிரவியங்கள் கொண்டு அபிசேகம் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து சிவனுக்கு அன்னம் சாத்தப்பட்டு புடலை, பீர்க்கன், கேரட், பீன்ஸ், உருளை, தக்காளி, கொத்தவரை, முள்ளங்கி, கத்தரி, மிளகாய் உள்ளிட்ட காய்கறிகளும் ஆப்பிள், ஆரஞ்சு,திராட்சை, மாதுளை, கொய்யா, வாழைப்பழம் உள்ளிட்ட பல வகைகளும் அணிவிக்கப்பட்டது. இதே போன்று நந்தியம் பெருமானுக்கும் அலங்காரம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சிவபெருமான் அன்னம் காய்கறிகள் பழங்களுடன் கூடிய அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதையடுத்து அன்னம் அலங்காரம் கலைக்கப்பட்டு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொணடு சிவன் நந்தியை பற்றி பக்தி பாடல்களை பாடி சாமி தரிசனம் செய்தனர்.

    ×