search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தூர் தூய்மையான நகரம்"

    • நாட்டின் தூய்மையான நகரங்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
    • தொடர்ந்து 6-வது முறையாக இந்தூர் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது.

    போபால்:

    தூய்மையில் சிறப்பாக செயல்படும் நகரங்களைக் கண்டறிந்து கவுரவப்படுத்தி ஊக்குவிக்கும் வகையில், ஸ்வச் சர்வேக்‌ஷான் என்ற தூய்மையான நகரங்களுக்கான விருது வழங்கும் திட்டத்தை 2016-ல் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்தார்.

    அதன்படி பல்வேறு பிரிவுகளின் கீழ் நாட்டில் தூய்மையில் சிறந்து விளங்கும் நகரங்கள் குறித்த தரவரிசைப் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.

    இந்நிலையில், 2022-ம் ஆண்டுக்கான நாட்டின் தூய்மையான நகரங்கள் பட்டியலை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. தூய்மையான நகரங்கள் பட்டியலில் மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் முதலிடம் பிடித்துள்ளது.

    கடந்த 5 முறை தூய்மை நகரங்களில் பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்தூர் தொடர்ந்து 6-வது முறையாக முதல் இடத்தை தக்கவைத்துள்ளது.

    இந்தூருக்கு அடுத்தபடியாக தூய்மையான நகரங்கள் பட்டியலில் குஜராத்தின் சூரத் 2-வது இடத்தையும், மகாராஷ்டிராவின் நவி மும்பை 3-வது இடத்தையும் பிடித்துள்ளது.

    ×