search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இணைப்புச் சாலை"

    • 4 வழி தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்தில், முத்தம்பட்டியில் இருந்து மத்துார் வரையிலான ஏறக்குறைய 4 கி.மீ., தூரத்திற்கு இரு வழி புறவழிச்சாலை அமைக்கப்பட்டது.
    • சாலையிலுள்ள குழியில் சிக்கி வாகனங்களும், வாகன ஓட்டிகளும் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.

    வாழப்பாடி:

    சேலம்-–சென்னை இடையே 4 வழி தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்தில், முத்தம்பட்டியில் இருந்து மத்துார் வரையிலான ஏறக்குறைய 4 கி.மீ., தூரத்திற்கு இரு வழி புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. இச்சாலையில் இருந்து, போக்குவரத்து முக்கியத்தும் வாய்ந்த வாழப்பாடி,– தம்மம்பட்டி சாலை மற்றும் வாழப்பாடி பேரூராட்சி குடியிருப்பு பகுதிகளையும் இணைக்கும் வகையில், சிங்கிபுரம் ராம்கோ சிமெண்ட் நிறுவன பங்களிப்புடன் தன்னிறைவு திட்டத்தின் கீழ், வாழப்பாடி பேரூராட்சி காமராஜ் நகரில் இருந்து புதுப்பாளையம் வரை, புறவழிச்சாலையின் இருபுறமும் இணைப்புச்சாலை அமைக்கப்பட்டது.

    தம்மம்பட்டி சாலையில் வரும் அனைத்து வாகனங்களும் இச்சாலை வழியாகவே சேலம்-–சென்னை தேசிய நெடுஞ்சா லையை அடைகின்றன. இதுமட்டுமின்றி, சிங்கிபுரத்தில் இயங்கும் சிமெண்ட் தொழிற்சாலைக்கு வரும் டேங்கர், பல்கர், டாரஸ், லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களும், வாழப்பாடி நகர்ப்புற குடியிருப்பு பகுதிக்கு செல்லும் அனைத்து ரக வானங்களும் இந்த இணைப்புச் சாலையிலேயே வந்து செல்கின்றன,

    இதனால் வாழப்பாடி மற்றும் இதன் சுற்றுப்புற கிராமங்களுக்கு இந்த இணைப்புச்சாலை பிரதானமாக விளங்கி வருகிறது. இந்நிலையில், புதுப்பாளையம் பகுதியில் இருந்து வழிந்தோடி வரும் கழிவுநீரும், மழைநீரும் சேர்ந்து தெற்குபுறத்திலுள்ள இணைப்புச் சாலையில் தேங்கியதால், போக்கு வரத்துக்கு பயன்படுத்த முடியாத அளவிற்கு குண்டும் குழியுமாக பழுதடைந்து கிடக்கிறது.

    இதனால், இப்பகுதியை கடந்து செல்ல முடியாமல், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பழுதடைந்து கிடக்கும் இணைப்புச்சாலையை சீரமைக்க, தேசிய நெடுஞ்சாலை மற்றும் வாழப்பாடி பேரூராட்சி நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி பொது மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

    இதுகுறித்து, புதுப்பாளையம் கிராம மக்கள் கூறியதாவது:- இந்த சாலை குண்டும் குழியுமாக பழுதடைந்து கிடக்கிறது. சாலையிலுள்ள குழியில் சிக்கி வாகனங்களும், வாகன ஓட்டிகளும் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பழுதடைந்த இணைப்புச் சாலையை சீரமைக்க அதிகாரிகள், காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • மத்திய மந்திரிக்கு தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கடிதம்
    • புகழ் பெற்ற வைணவ திருத்தலமான திருவாழி மார்பன் கோவில் இக்கிராமத்தில் தான் அமைந்துள்ளது

    நாகர்கோவில்:

    முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை ஊராட்சி ஒன்றியம், திருப்பதிசாரம் ஊராட்சிக்கு ட்பட்ட பகுதியில் திருவனந்தபுரம் தேசிய ெநடுஞ்சாலை அமைக்க ப்பட்டுள்ளது. இந்த ஊராட்சியின் பிரதான சாலையான ஓட்டாபீஸ் முதல் வீரநாராயணமங்கலம் செல்லும் சாலையின் குறுக்கே இந்த தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. மேலும் உள்ளூர் மக்களின் போக்குவரத்திற்கு தேவையான இணைப்புச் சாலை இல்லாமல் இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாள் ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று விபத்துகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களின் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் வைணவ திருத்தலங்களில் ஒன்றான புகழ் பெற்ற திருவாழி மார்பன் கோவில் இக்கிராமத்தில் தான் அமைந்துள்ளது என்பது குறிப்பிட த்தக்கது. நாள்தோ றும் கோவிலுக்கு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து இறைவனை தரிசித்து செல்கின்ற புண்ணிய பகுதியாக இப்பகுதி விளங்கி வருகிறது.

    இதனை கருத்தில் கொண்டு பொதுமக்களின் நலன் கருதி, இச்சாலையின் முக்கியத்துவம் கருதி, விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் இப்பகுதியில் இணைப்புச் சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×