search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இணைப்பு வசதி"

    • அம்மனின் முகத்தில் வெயில் அடிக்கும்போது தான் பூஜைகள் தொன்று தொட்டு நடத்தப்பட்டு வருகிறது.
    • கோவிலை பராமரிக்கவும் மின் இணைப்பு வசதியை ஏற்படுத்தவும் ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு

    கன்னியாகுமரி, ஆக.9-

    சாமித்தோப்பு உப்ப ளத்தின் நடுவே பாண்டிய மன்னனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட வெயில் காத்த அம்மன் கோவில் உள்ளது. பகல் 12 மணிக்கு இந்த கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனின் முகத்தில் வெயில் அடிக்கும்போது தான் பூஜைகள் தொன்று தொட்டு நடத்தப்பட்டு வருகிறது.

    பழமை வாய்ந்த இந்த கோவிலில் நீண்ட காலமாக மின்விளக்கு வசதி இல்லாமல் இருந்தது. இதனை நிவர்த்தி செய்து தர வேண்டும் என்று வடக்கு தாமரைகுளம் பகுதி மக்கள், தி.மு.க. வர்த்தகர் அணி மாநில இணைச் செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான வக்கீல் தாமரைபாரதியிடம் கோரிக்கை விடுத்தனர். அவர், அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றதன் பயனாக இந்த கோவிலை பராமரிக்கவும் மின் இணைப்பு வசதியை ஏற்படுத்தவும் ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதைத் தொடர்ந்து முதல் கட்டமாக புதிதாக மின் கம்பங்கள் நடப்பட்டு மின் இணைப்பு வசதி செய்யப்பட்டு வருகிறது. இந்த பணிகளை தி.மு.க. வர்த்தகர் அணி மாநில இணை செயலாளர் தாமரை பாரதி நேரில் சென்று பார்வையிட்டதோடு பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார். அவருடன் ஒன்றிய பொருளாளர் எட்வின் ராஜ், மாவட்ட பிரதிநிதி தனசம்பத், வடக்கு தாமரைகுளம் கிளை செயலாளர் மணி உள்பட பலர் சென்றனர்.

    ×