search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடைநின்ற"

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் திறக்கப்படுவதால் இடைநின்ற மாணவ-மாணவிகளை சேர்க்கும் பணியில் ஆசிரியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
    • வகுப்பறைகளை தயார் செய்து மாணவர்கள் சமூக இடைவெளியுடன் அமரும் வகையில் இருக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    ராமநாதபுரம்

    கோடை விடுமுறைக்கு பின்னர், தமிழகத்தில் பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான புதிய மாணவ, மாணவிகளை பள்ளிகளில் சேர்க்கும் பணியில் ஆசிரியர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இதற்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் வகுப்பறைகளை சுத்தம் செய்து வர்ணம் பூசி தயார் செய்யும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வகுப்பறைகளை தயார் செய்து மாணவர்கள் சமூக இடைவெளியுடன் அமரும் வகையில் இருக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    கடந்த கல்வி ஆண்டுகளில் கோடை விடுமுறை 2 மாதம் இருந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் இரண்டு வாரம் மட்டுமே அனுமதிக்கப்பட்டது.

    இதனால் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு மீண்டும் வர தயாராக உள்ள நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளை கண்டிப்பாக கடைபிடித்து மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    இதையடுத்து ராமநாதபுரம், பரமக்குடி, மண்டபம் ஆகிய கல்வி மாவட்டங்களுக்கும் தேவையான பாடப்புத்தகங்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டன. அந்த புத்தகங்களை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பும் பணி சில தினங்களாக துரிதமாக நடந்து வருகிறது.

    மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம் விநியோகிக்கப்படும் பாடப்புத்தகங்களை தலைமை ஆசிரியர்கள் சொந்த பொறுப்பில் எடுத்து செல்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளில் பள்ளிகளில் கடைபிடிக்கப்பட்டு வந்த கொரோனா வழிகாட்டல் நெறிமுறைகளை நடப்பு கல்வி ஆண்டிலும் தொடர்ந்து பின்பற்றும் வகையில் அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட கல்வி அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

    அந்தந்த கல்வி மாவட்ட அளவில் அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்தில் இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து அவர்களை பள்ளியில் மீண்டும் சேர்க்கும் முயற்சியில் ஆசிரியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    ×