search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடதுசாரி மாணவர் அமைப்பு"

    • கேரள ஆளுநர் ஆரீப் முகமது கான் இன்று கொல்லம் பகுதியில் காரில் சென்றுகொண்டிருந்தார்.
    • அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி மாணவர் அமைப்பினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள ஆளுநர் ஆரீப் முகமது கான் கொல்லம் பகுதியில் இன்று காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி மாணவர் அமைப்பினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

    இதையடுத்து, ஆளுநர் ஆரீப் முகமது கான் காரில் இருந்து இறங்கி ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்குச் சென்றார். நான் இங்கு தான் இருப்பேன். போதிய பாதுகாப்பு வழங்குங்கள் எனக்கூறி தர்ணாவில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில், கேரள ஆளுநர் ஆரீப் முகமது கான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ஆர்ப்பாட்டத்தில் முதலில் 12 பேர் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். அதன்பின் அவர்கள் 17 பேர் என எஃப்.ஐ.ஆரில் எழுதப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு இருந்தனர்.

    அந்த வழியாக முதல் மந்திரி சென்றால் அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீசார் முன்னிலையில் 22 பேர் கருப்புக் கொடியுடன் கூடிவிடுவார்களா?

    அவர்களை கடமையைச் செய்யவிடாமல் தடுப்பது யார்? இது அரசியல் காரணங்களுக்காக மட்டுமே. இதன் பின்னணியில் உள்ள அரசியல் தலைவர் யார்? அது முதல் மந்திரியா? இதனால் எல்லாம் நான் துவண்டு போகக்கூடியவன் அல்ல என காட்டாமாக தெரிவித்தார்.

    ×