search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆஷ்விட்ஸ் முகாம்கள்"

    • ஆஷ்விட்ஸ் முகாம்களில் ஹிட்லர் லட்சக்கணக்கான யூதர்களை கொன்று குவித்தார்
    • யூத எதிர்ப்பு சிந்தனைகள் எக்ஸ் தளத்தில் குறைவு என்றார் மஸ்க்

    இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியின் அதிபர் அடால்ஃப் ஹிட்லர், அண்டையில் உள்ள போலந்து நாட்டை ஆக்கிரமித்தார்.

    யூத மதத்தினரை வெறுத்த ஹிட்லர், போலந்தில் 40க்கும் மேற்பட்ட முகாம்களில் லட்சக்கணக்கான யூதர்களை அடைத்து வைத்து, அவர்களை தனது படையினரை கொண்டு கூட்டம் கூட்டமாக கொன்று குவித்தார்.

    1945ல், "ஆஷ்விட்ஸ்" (Auschwitz camp) என அழைக்கப்படும் சித்திரவதை முகாம்களில், இரண்டாம் உலகப் போர் நிறைவடைந்து, ஹிட்லர் உயிரிழந்து, அமெரிக்க-இங்கிலாந்து படைகள் வெற்றி பெற்ற காலத்திலிருந்து, நாஜி படையினரின் கொடுமைகளை உலகிற்கு உணர்த்தும் விதமாக சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு பராமரிக்கப்பட்டு வருகிறது.

    உலகெங்கும் இருந்து பல்லாயிரக்கணக்கான பேர் போலந்து நாட்டில் இவற்றை காண வருவது வழக்கம்.

    இந்நிலையில் ,உலகின் நம்பர் 1 கோடீசுவரரரும், அமெரிக்க தொழிலதிபருமான எலான் மஸ்க், போலந்து சென்றார். 


    தனது மகனுடன் அங்கு சென்றிருந்த மஸ்க், ஆஷ்விட்ஸ் முகாம்களை பார்வையிட்டு, கொல்லப்பட்ட யூதர்களுக்கான நினைவகத்தில் அஞ்சலி செலுத்தினார்.

    தெற்கு போலந்தில் கிராகோ (Krakow) பகுதியில் ஐரோப்பிய யூதர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் உரையாற்றினார் மஸ்க்.


    அப்போது பேசும் போது மஸ்க், "மனிதர்கள், சக மனிதர்களுக்கு இப்படி ஒரு கொடுமையை செய்ய முடியும் என்பது மிகவும் சோகமாக இருக்கிறது. துயரத்தில் என் மனம் நெகிழ்ந்து விட்டது. நேரிடையாக நீங்கள் இந்த இடத்திற்கு வந்து பார்த்தால் உங்கள் இதயம் இன்னும் கனத்து விடும். யூதர்களுக்கு எதிரான கருத்துகள் எக்ஸ் இணைய தளத்தில் குறைவு" என தெரிவித்தார்.

    இஸ்ரேல்-ஹமாஸ் போர் பின்னணியில் அதிகரித்து வரும் யூத எதிர்ப்பு குறித்து ஐரோப்பிய அரசியல் தலைவர்கள் நடத்தும் கருத்தரங்கில் மஸ்க் கலந்து கொள்கிறார்.

    ×