search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆளுநர் ஆர் என் ரவி"

    • ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் என சபாநாயகர் அறிவிப்பு.
    • ஆளுநர் பேசியது தொடர்பான வீடியோ எக்ஸ் பக்கத்தில் வெளியீடு.

    தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுரை உரையுடன் தொடர் தொடங்குவது வழக்கம்.

    ஆளுநர் ஆர்.என். ரவி நேற்று அவைக்கு வந்தார். அவர் சில கருத்துக்களை குறிப்பிட்டு பேசினார். அதன்பின் ஆளுநர் உரையை முழுமையாக புறக்கணித்து இருக்கையில் அமர்ந்தார். அதன்பின் சபாநாயகர் ஆளுநர் உரையை தமிழில் வாசித்தார்.

    ஆளுநர் உரையில் குறிப்பிட்டுள்ளவை அப்படியே அவைக்குறிப்பில் இடம் பெற வேண்டும். அதைத்தவிர்த்து ஆளுநர் பேசியது அவைக்குறிப்பில் இடம் பெறக்கூடாது என துரைமுருகன் தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அவைக்குறிப்பில் இருந்து ஆளுநர் பேசியது நீக்கப்படும். ஆளுநர் உரை அவைக்குறிப்பில் அப்படியே இடம் பெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

    அதன்பிறகு அவையில் நடந்தது குறித்து ஆளுநர் மாளிகை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அத்துடன் ஆர்.என். ரவி பேசிய வீடியோ எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டது.

    இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் செல்வப்பெருந்தகை சபாநாயகர் அப்பாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில் "சட்டப்பேரவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட உரையை தனது எக்ஸ் தளத்தில் பதிவேற்றிய ஆளுநர் ஆர்.என். ரவி மீது அவை உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர அனுமதிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாடுகளுக்கு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    ×