search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆய்வுக்கட்டுரை"

    • சுமார் 150-க்கும் மேற்பட்டோர் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
    • ஏற்பாடுகளை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    நாகர்கோவில் :

    அஞ்சுகிராமம் ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை சார்பில் தானியங்கி, நுண்ணறிவு கணினி மற்றும் தகவல்தொடர்பு தொடர்பான சர்வதேச மாநாடு நடைபெற்றது. கல்லூரி தலைவர் நீல மார்த்தாண்டன், துணை தலைவர் நீல விஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்ஸி ஜியோ ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் ராஜேஷ் முன்னிலை வகித்தார்.

    டாக்டர் ஸ்ரீ தேவி சிறப்பு விருந்தினர்களை வரவேற்றார். மாநாட்டின் கருப்பொருள் மற்றும் நோக்கத்தை பேராசிரியர் மோகனலட்சுமி வெளி யிட்டார்.

    பேராசிரியர் ரெஜி தலைமை விருந்தினரை அறிமுகப்படுத்தினார். பேராசிரியர் பி.சுபோதா அமர்வு நபர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

    நூருல் இஸ்லாம் உயர் கல்வி மையம் பேராசிரியர் எச்.வென்னிலா, பேராசிரி யர்கள் முத்துமணிகண்டன், யு.டி.எஸ்.பிள்ளை ஆகியோர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி, ஆட்டோ மேஷன் தொழில்நுட்பத்தின் ஆட்டோமேஷன் மற்றும் தேவை குறித்து எடுத்துரைத்தார். டாக்டர். யு.டி.எஸ்.பிள்ளை இந்தியாவில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர். மற்றும் அதன் ஆராய்ச்சி ஆய்வகங்கள் பற்றிய விழிப்புணர்வை அளித்து மாணவர்களை ஆராய்ச்சியை தொடர அறிவுரைகளை வழங்கினர். பெனிஷா நன்றி கூறினார்.

    மேலும் கருத்தரங்கில் பல்வேறு தொழில்துறை, கல்வித்துறை சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு கல்லூரிகளை சார்ந்த இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தனர். சுமார் 150-க்கும் மேற்பட்டோர் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    ×