search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆம் ஆத்மி அரசாங்கம்"

    • டெல்லி அரசின் மதுபான கொள்கையில் ஊழல் நடந்ததாக சக்ஸேனா தெரிவித்தார்
    • கடந்த வருடம் டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார்

    கடந்த 2021 நவம்பரில் ஆம் ஆத்மி (AAP) கட்சியை சேர்ந்த டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் புதிய மதுபான கொள்கையை கொண்டு வந்தார். இதன்படி, சில்லறை வியாபாரத்தில் மதுபான விற்பனை செய்வதை டெல்லி அரசு நிறுத்தி கொண்டு தனியார் விற்பனையாளர்களை அதில் ஈடுபட அனுமதித்தது. இதன் மூலம் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும் என மாநில அரசு கூறியது.

    ஜூலை 2022ல் டெல்லி தலைமை செயலாளர் இந்த கொள்கை மூலம் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றுள்ளதாக அறிவித்தார். அவர் பரிந்துரையின் பேரில் டெல்லி துணை நிலை ஆளுனர் வி.கெ. சக்ஸேனா, சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்தார்.

    ஆகஸ்ட் 2022ல் இந்த வழக்கை விசாரிக்க தொடங்கிய சி.பி.ஐ. அமைப்புடன் அமலாக்க துறையும் இணைந்து கொண்டது. தீவிர விசாரணையில் டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா கைதானார்.

    இந்நிலையில் இன்று, டெல்லி மதுபான கொள்கை தொடர்பான விசாரணையுடன் இணைக்கப்பட்ட பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் இல்லத்தில், அமலாக்க துறை அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்டது. சோதனை நிறைவடைந்ததும் அவர் கைது செய்யப்பட்டார்.

    சஞ்சய் சிங் கைது செய்யப்படுவதை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் அவர் வீட்டு வாசலில் பா.ஜ.க.விற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கைது செய்யப்பட்ட சஞ்சய் சிங் அமலாக்க இயக்குநரக அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

    ×