search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆப்த மித்ரா திட்டம்"

    • தமிழகத்தில் 16 மாவட்டங்களில் பேரிடர்களை கையாள்வது தொடர்பாக 5500 தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு அதன்படி தேனி மாவட்டத்தில் 300 தன்னார்வலர்களுக்கு பயிற்சியளிக்கப்படவுள்ளது.
    • தேனி மாவட்டத்தில் முதற்கட்டமாக 200 தன்னார்வலர்களுக்கு 12 நாட்கள் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

    தேனி:

    தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை அபாய குறைப்பு முகமை மூலமாக தமிழகத்தில் 16 மாவட்டங்களில் பேரிடர்களை கையாள்வது தொடர்பாக 5500 தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு அதன்படி தேனி மாவட்டத்தில் 300 தன்னார்வலர்களுக்கு பயிற்சியளிக்கப்படவுள்ளது.

    தேனி மாவட்டத்தில் மழை, வெள்ளம், புயல், நிலநடுக்கம், நிலச்சரிவு போன்ற பேரிடர் மீட்பு பணியில் ஈடுபட, செஞ்சிலுவை சங்கம், நேருயுவகேந்திரா, ஊர்காவல்படை, தீயணைப்பு துறை மற்றும் வருவாய்த்துறை மூலமாக 300 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    தேனி மாவட்டத்தில் நடைபெறும் ஆப்தமித்ரா பயிற்சியினை, மருத்துவர்கள், கல்லூரி பேராசிரியர்கள், தீயணைப்புத் துறை அலுவலர்கள், தேசிய பேரிடர் மீட்பு துறை அலுவலர்கள் மற்றும் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து மாவட்ட நிர்வாகத்தின் மூலம் முதற்கட்டமாக 200 தன்னார்வலர்களுக்கு 12 நாட்கள் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சி ஒரு பயனுள்ள பயிற்சியாகும்.

    பேரிடர் தொடர்பான இப்பயிற்சி முடியும் போது தேனி மாவட்டத்தை சேர்ந்த 200 தன்னார்வலர்களும் பேரிடர் தொடர்பான மீட்பு பணியில் ஈடுபட தகுதியானவர்களாக இருப்பீர்கள். தேனி மாவட்டத்தில் எந்த ஒரு இடத்திலும் பேரிடர் ஏற்பட்டால் 200 நபர்களும் மீட்பு பணியில் ஈடுபட வேண்டும்.

    பயிற்சியில் கலந்து கொண்ட 200 தன்னார்வலர்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு வளங்கள் ஆவார். இப்பயிற்சியின் போது ஒவ்வொரு தன்னார்வலருக்கும் ரூ.9,000 மதிப்பிலான (டார்ச், லைஃப் ஜாக்கெட், பாதுகாப்பு கையுறை, கத்தி, முதலுதவி பெட்டி, கேஸ் லைட்டர், விசில், தண்ணீர் பாட்டில், கொசுவலை, சீருடை, ரெயின் கோட், ஜி.யு.எம் பூட்ஸ், பாதுகாப்பு கண்ணாடிகள், பாதுகாப்பு தலைக்கவசம்) 14 வகை மீட்பு உபகரணங்கள் வழங்கப்படவுள்ளது.

    மேலும், பயிற்சியில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு தன்னார்வலருக்கும் ரூ.1000 மதிப்பிலான காப்பீடு செய்யப்பட உள்ளது. என்று மாவட்ட கலெக்டர் முரளிதரன் தெரிவித்தார்.

    ×