search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆண்டு பெருவிழா"

    • ஞானப்புகழ்ச்சி பாடும் நிகழ்ச்சி இன்று இரவு நடக்கிறது
    • நாளை குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.

    கன்னியாகுமரி:

    தக்கலை மேட்டுக்கடை யில் வாழ்ந்து அற்புதங்கள் செய்து உயிரோடு சமாதி யானதாக நம்பப்படும் மெய் ஞான மாமேதை செய்கு பீர் முகமது சாகிபு ஒலியுல்லா (ரலி) ஆண்டு பெருவிழா ஆண்டுதோறும் வெகு விமரி சையாக கொண்டாடப்படு வது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான பெருவிழா வானது கடந்த மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் இரவு மவுலீது ஓதுதல், மார்க்கபேரு ரையாற்றும் நிகழ்ச்சி நடந்தது.

    விழாவின் முக்கிய நிகழ் வான பீர்முகமது சாகிபு ஒலியுல்லா இறைவனை போற்றி எழுதி பாடிய ஞானப்புகழ்ச்சி பாடலை அவரது சமாதியின் அருகில் அமர்ந்து ஆயிரக்கணக்கானோர் ஒருசேர பாடும் நிகழ்ச்சி இன்று (ஞாயிற்றுக்கி ழமை) இரவு 9 மணிக்கு தொடங்குகிறது. நிகழ்ச்சியா னது மறுநாள் அதிகாலை வரை தொடர்ச்சியாக நடக் கிறது. அதைதொடர்ந்து அன்று மாலை 4.30 மணிக்கு பொது நேர்ச்சை வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பங்கு கொள்வதற் காக பீரப்பா பிறந்த தென்காசி மாவட்டத்தில் இருந்தும், அவர் பல காலம் வாழ்ந்த கேரள மாநிலத்தில் இருந்தும் குமரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் திர ளான பொதுமக்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த விழாவில் பங்கேற்க வசதியாக நாளை குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. விழா ஏற்பாடுகளை அஞ்சுவன்னம் பீர்முகம்மதியா முஸ்லீம் அசோசியேசன் தலைவர் அப்துல் ஜப்பார் துணைத்தலைவர் முகம்மது சலீம், பொருளாளர்ரபீக், நிர்வாககுழு உறுப்பினர்கள் முகமது யாசீன், ஷாகுல் ஹமீது, சாதிக், அலி அக்பர், அப்துல் ரசாக், பீர்முகம்மது, கமாலுதீன், முகம்மது சபீக், சத்தார், அப்துல்ரசீது, ரயிஸ் சுபிகான், சாக்கிர் அலி, நிஜாம், முபாரக் அலி, விழாக்குழு தலைவர் மாகீன் அபூபக்கர், செயலாளர் ஷாகுல்ஹமீது, பொருளாளர் ஹாஜா மைதீன், துணைச்செயலாளர் அஸ்ரப் அலி, பூபந்தல்குழு தலைவர் பசில் ஆகியோர் சிறப்பாக செய்துள்ளனர்.

    • பாளையம் புனித ஆரோக்கிய மாதா ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • மாதா உருவம் பொறித்த கொடியினை ஏற்றி வைத்தார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட பாளையம் கிராமத்தில் புனித ஆரோக்கிய மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் பெருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி 119-வது ஆண்டு பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று மாலை ஆலய வளாகத்தில் கொடி கம்பத்தில் பாளையம் புனித சூசையப்பர் ஆலய பங்குதந்தை ஜெயராஜ் ஆரோக்கிய மாதா உருவம் பொறித்த கொடியினை ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து அன்னை வழிகாட்டும் விண்மீன் என்ற தலைப்பில் மறையுரை சிந்தனை நடந்தது. பெருவிழா கொடியேற்றத்தில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழா நாட்களில் தினமும் இரவு சிறப்பு திருப்பலி நடைபெறவுள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியான அன்னையின் ஆடம்பர சப்பர பவனி வருகிற 7-ந்தேதி இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. ஆண்டு பெருவிழா திருப்பலி 8-ந்தேதி காலை 8 மணிக்கு நடைபெற்று பெருவிழா நிறைவு பெறுகிறது."

    ×