search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆண்டிப்பட்டி விபத்து"

    ஆண்டிப்பட்டி அருகே டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி வியாபாரி பலியானார். விபத்து குறித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆண்டிப்பட்டி:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் கள்ளிக் குடியைச் சேர்ந்தவர் வீரகாளி (வயது 43). இவர் விருதுநகர், பாண்டியன்நகரைச் சேர்ந்த ராஜ்குமார் (36) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஆண்டிப்பட்டிக்கு வியாபார வி‌ஷயமாக வந்தார்.

    தனியார் பெட்ரோல் பங்க் அருகே இவர்கள் வந்து கொண்டு இருந்த போது எதிரே வந்த டிராக்டர் மீது பயங்கரமாக மோதினர். இதில் தூக்கி வீசப்பட்ட வீரகாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    படுகாயமடைந்த ராஜ்குமார் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் வீரகாளியின் சகோதரர் காளி முத்து புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர்.

    ×