search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆட்டுக்கொல்லி"

    • தடுப்பூசிகளை எவ்வாறு கையாள்வது மற்றும் செலுத்துவது என்பது குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
    • கந்தசாமி, சுகுமார், கால்நடை உதவி டாக்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், கால்நடை நோய் ஆய்வு மற்றும் தடுப்பூசி தொழில்நுட்பக் கூட்டம் கலெக்டர் பழனி தலைமையில் நடைபெற்றது. விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கால்நடைகளை தாக்கும் கோமாரி அம்மை மற்றும் ஆடுகளை தாக்கும் ஆட்டுக்கொல்லி நோய்க்கான தடுப்பூசிகளை எவ்வாறு கையாள்வது மற்றும் செலுத்துவது என்பது குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

    இதில் சென்னை கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் மருத்துவ பணிகள் கூடுதல் இயக்குநர் டாக்டர் சத்தியநாராயணன் விழுப்புரம் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் லதா, கள்ளக்குறிச்சி துணை இயக்குநர் டாக்டர் பொன்னம்பலம், உதவி இயக்குநர்கள் டாக்டர்கள் ராஜேந்திரன், கந்தசாமி, சுகுமார், கால்நடை உதவி டாக்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    ×