search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடிகிருத்திகை"

    • மேல்மலையனூர் பகுதியில் ஆடி கிருத்திகை விழா நடந்தது.
    • காலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது.

    விழுப்புரம்:

    மேல்மலையனூர் ஸ்ரீ பச்சையம்மன் கோவில் மலைக்குன்றின் மீது அமைந்துள்ள வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகப்பெருமான் கோவிலில் ஆடிக் கிருத்திகை விழா நடந்தது. இதனை முன்னிட்டு காலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது. காலை 11.30 மணிக்கு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் தெரு மாரியம்மன் கோவிலிலிருந்து பக்தர்கள் காவடி மற்றும் 108 பால்குடங்களுடன் ஊர்வலமாக புறப்பட்ட 12.30 மணிக்கு கோவிலை வந்தடைந்தனர்.

    மன்னார்சாமி சமேத பச்சையம்மனை வலம் வந்தவுடன் குன்றின் மீது அமர்ந்துள்ள வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான் கோவிலை அடைந்தனர். பின்பு பாலாபிஷேகம் செய்யப்பட்டு, சாமிக்கு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் மற்றும் 3 வம்சாவழியினர் செய்திருந்தனர். இதே போல் அவலூர்பேட்டை சித்தகிரி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

    ×