search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிய துப்பாக்கி சுடுதல்"

    • ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது.
    • இந்த போட்டியில் இந்தியா வென்ற 6-வது தங்கப்பதக்கம் இதுவாகும்.

    ஜகர்த்தா:

    ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது. நேற்று நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆசிய ஒலிம்பிக் தகுதிச்சுற்று ரைபிள்/பிஸ்டல் போட்டியில் இந்தியா மேலும் இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி மற்றும் வெண்கலத்தை கைப்பற்றி பதக்கப் பட்டியலில் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டது.

    10 மீட்டர் ஏர்ரைபிள் கலப்பு அணிகள் பிரிவு பந்தயத்தின் இறுதி சுற்றில் இந்தியாவின் ருத்ராங்ஷ் பட்டீல், மெகுலி கோஷ் இணை 16-10 என்ற புள்ளி கணக்கில் சென் யுபான்-ஜூ மிங்ஷூய் ஜோடியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கியது.

    இந்த போட்டியில் இந்தியா வென்ற 5-வது தங்கப்பதக்கம் இதுவாகும். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவின் இறுதி சுற்றில் இந்தியாவின் அர்ஜூன் சிங் சீமா-ரிதம் சங்வான் கூட்டணி 11-17 என்ற புள்ளி கணக்கில் வியட்நாமின் து வின் டிரின்க்-குயாங் ஹூய் பாம் இணையிடம் வீழ்ந்து வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி கண்டது.

    இரண்டாவது நாள் முடிவில், இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 5 தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலம் என மொத்தம் 10 பதக்கங்களுடன் உள்ளது.

    ×