search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆங்கிலம்"

    • என் பிள்ளைக்கு தமிழ் தெரியலங்கிறது, எனக்கு அவமானம் இல்லை.
    • என் பிள்ளைகள் தமிழ் படிக்க இங்கே பள்ளிக்கூடங்கள் இல்லை

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாராளுமன்ற தேர்தலில், ஏற்கனவே தங்கள் கட்சி பயன்படுத்திய கரும்பு விவசாயி சின்னத்தை தரும்படி, தலைமை தேர்தல் ஆணையத்திடம் கேட்டார்.

    ஆனால் அந்த சின்னம் கர்நாடகாவை சேர்ந்த ஒரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து அந்த சின்னத்தை கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்த நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம் ஒதுக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்து அதற்கு பதிலாக படகு, கப்பல் அல்லது தீப்பெட்டி சின்னங்களில் ஏதாவது ஒன்றை தங்கள் கட்சிக்கு வழங்கும்படி தேர்தல் ஆணையத்திடம், நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்தது.

    நாம் தமிழர் கட்சியின் கோரிக்கையை, தேர்தல் கமிஷன் நிராகரித்தது. நாம் தமிழர் கட்சிக்கு ஏற்கனவே ஒதுக்கியுள்ள 'மைக்' சின்னம் தான் என்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது.

    இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் போட்டியிடும் என்று சீமான் இன்று அறிவித்தார்.

    அப்போது விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் நா.த.க வேட்பாளர் கௌசிக், வேட்பு மனுதாக்கலின்போது தமிழ் படிக்கத் தெரியாமல் திணறியது குறித்து, அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த அவர், "என் பிள்ளைக்கு தமிழ் தெரியலங்கிறது, எனக்கு அவமானம் இல்லை. வீழ்வது நாமாகினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்கிற வெற்று முழக்கத்தை முன்வைத்து எங்களை வீழ வைத்தவர்கள்தான் அவமானப்பட வேண்டும். நாங்கள் ஏன் அவமானப்பட வேண்டும்.

    "என் மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழியில்தான் படிக்கின்றனர். நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ் படிக்க இங்கே பள்ளிக்கூடங்கள் இல்லை" என்று தெரிவித்துள்ளார். 

    • இந்த போர்டுகளில் ஆங்கில வாசகங்கள் மட்டுமே உள்ளன.
    • தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் வைக்க வேண்டும்.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி பகுதியில் மாநில சாலைகள் அகலபடுத்தப்பட்டு வருகின்றன. இதில் கல்லணை- திருவையாறு சாலை கல்லணையில் இருந்து திருக்காட்டுப்பள்ளி வரை அகலபடுத்தும் பணிகளில் திருச்செனம்பூண்டி வரை முடிந்துள்ளது. தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகின்றன.முடிவடைந்த சாலைகளில் வெள்ளை கோடுகள், சாலை ஓரங்களில் மிளிரும் எச்சரிக்கை பலகைகள், பிரதிபலிப்பான்கள் பொருத்தியுள்ளனர். சாலை அருகில் பள்ளிகள், வேகத்தடைகள் உள்ளதை குறிக்கும் பலகைகளை வைத்துள்ளனர்.

    அதே சமயத்தில் சாலையின் இருபுறமும் ஆங்காங்கே ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய போர்டுகள் நெடுஞ்சாலைதுறையினர் வைத்துள்ளனர். ஆனால் இந்த போர்டுகளில் ஆங்கில வாசகங்கள் மட்டுமே உள்ளன. இதனை கண்ட தமிழ் ஆர்வலர்கள் வேதனையடைந்துள்ளனர்.

    தமிழ்நாட்டில் பெரும்பாலும் தமிழ் தெரிந்த ஓட்டுநர்களுக்கு புரியும் மொழியில் விளம்பர வாசகங்கள் எழுதலாம். ஆங்கில மொழியில் வாசகங்கள் வேண்டும் என்றால் இரு மொழிகளிலும் வாசகங்கள் அடங்கிய போர்டுகள் வைக்கலாம். தமிழை புறக்கணித்து ஆங்கில வாசகங்கள் அடங்கிய போர்டுகள் வைக்கப்பட்டுள்ளதை உடனே மாற்றம் செய்து தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் வைக்க வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • எதிலும் ஆங்கிலம் கிடையாது தாய்மொழி மட்டும்தான் என்பதை உணர வேண்டும்.
    • தமிழ் பயிற்று மொழியாகவும், பாட மொழியாகவும் இருக்கிறது.

    தஞ்சாவூர்:

    சென்னையில் பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் கடந்த 21-ந் தேதி தமிழைத் தேடி பரப்புரை பயணத்தை பா.ம.க மற்றும் பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொடங்கினார்.

    தொடர்ந்து 6 ஆம் நாளாக தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழைத் தேடி பரப்புரை பயண நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது :-

    தமிழகத்தில் 1976 ஆம் ஆண்டு வரை 29 பள்ளிகளில் மட்டுமே ஆங்கில வழிக் கல்வி முறை இருந்தது.

    விடுதலைக்கு முன்பு இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்களின் குழந்தைகள் படிப்பதற்காக இப்பள்ளிகள் தொடங்கப்பட்டன.

    1999 ஆம் ஆண்டில் 2,122 பள்ளிகளில் மட்டும்தான் ஆங்கிலம் பயிற்று மொழியாகவும், தமிழ் கட்டாயப் பாட மொழியாக இல்லாமலும் இருந்தது.

    ஆனால், இப்போது தமிழகத்தின் பெரும்பாலான அரசு பள்ளிகளுக்கு ஆங்கில வழிக் கல்வி முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இப்போது 2,122 பள்ளிகளில் மட்டும்தான் தமிழ் பயிற்று மொழியாகவும், பாட மொழியாகவும் இருக்கிறது. மீதமுள்ள பல்லாயிரக்கணக்கான பள்ளிகளில் தமிழைத் தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது.

    தாய்மொழியில் படித்தால் அறிவியல், தொழில்நுட்பத்தை எப்படி கற்றுக் கொள்ள முடியும் என வினா எழுப்புகின்றனர். ஜப்பான், தென் கொரியா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் தொழில்நுட்பத்துக்குப் பெயர் பெற்றவை.

    இந்த நாடுகள் எதிலும் ஆங்கிலம் கிடையாது. தாய்மொழி மட்டும்தான் என்பதை உணர வேண்டும்.

    பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட பாடங்கள் தமிழ் மொழியில் கற்றுத் தரப்பட்டன.

    அதற்கான பாட நூல்கள் உருவாக்கி வைக்கப்பட்டிருந்தன.

    அதற்கு காரண மானவர்கள் தமிழன்தான்.

    அனைத்து பாடங்கள், கண்டுபிடிப்பு, ஆராய்ச்சித் துறைகளுக்கும் அதை விரிவுபடுத்த யாரும் எதையும் செய்யவில்லை.

    தமிழ்நாட்டில் தமிழைப் பயிற்று மொழியாக்க வேண்டும் என்பது தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்களின் 50 ஆண்டு கால கனவு. ஆனால், இக்கனவு மட்டும் கைக்கு எட்டாமல் தொடு வானம்போல விலகிக் கொண்டே செல்கிறது. அதற்கு காரணம் தமிழைப் பயிற்று மொழியாக்க ஆக்கப்பூர்வ மான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

    எனவே, தமிழ்ப் பல்கலைக்கழகம் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட அனைத்து படிப்புகளையும் தமிழில் படிப்பதற்குத் தேவையான நூல்களை உருவாக்க வேண்டும்.

    தமிழ் ஆராய்ச்சிக்கு குறைந்தது 5 பல்கலைக்கழ கங்களையாவது தொடங்க வேண்டும். தமிழ் வளர்த்து நாம் வாழ்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சிக்கு தமிழ்ப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் திருவள்ளுவன் தலைமை வகித்தார்.

    முன்னாள் துணைவேந்தர் சுப்பிரமணியம், பதிவாளர் (பொ) தியாகராஜன், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் மணியரசன், தமிழ் வழி கல்வி இயக்கம் இளமுருகன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.

    முன்னதாக, அறக்கட்டளை தலைவர் மணி வரவேற்றார். முடிவில் குஞ்சிதபாதம் நன்றி கூறினார்.

    • ஆங்கிலத்தை கற்பிக்க உதவும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
    • 636 ஆசிரியர்கள் பயன் அடைவர்.

    உடுமலை:

    உடுமலை திருமூர்த்தி நகர், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் வாயிலாக தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், 4 மற்றும் 5ம் வகுப்பு ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.அவ்வகையில், உடுமலை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில், ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பயிற்சி நிறுவன முதல்வர் சங்கர் பேசியதாவது: -

    ஆசிரியர்களுக்கு எளிய முறையில் ஆங்கிலத்தை கற்பிக்க உதவும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆசிரியர்கள், மாணவர்களின் ஆங்கிலம் படிக்கும் திறன் மற்றும் எழுதும் திறன் ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும்.இதேபோல, 6, 7, 8, 9 ம் வகுப்பு ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படும். இதன் வாயிலாக திருப்பூர் மாவட்டத்தில் தொடக்க நிலை வகுப்புகளில் பணிபுரியும் 1,508 ஆங்கில பாட ஆசிரியர்கள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 6 முதல் 9-ம் வகுப்புகளில் ஆங்கில பாடம் கற்பிக்கும் 636 ஆசிரியர்கள் பயன் அடைவர்.இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து பயிற்சியின் சிறப்பம்சங்கள் குறித்து பணியிடை பயிற்சி துறை தலைவர் பாபிஇந்திரா விளக்கினார். முதுநிலை விரிவுரையாளர் சுப்பிரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். பயிற்சியின் ஒருங்கிணைப்பாளராக சுகுணா செயல்பட்டார்.

    • ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சு திறன் வளர்த்தல் குறித்த பயிற்சி நடந்தது.
    • 2 மையங்களில் தனித்தனியாக நடந்தது

    கரூர்

    தோகைமலை ஒன்றியத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள 4-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சு திறன் வளர்த்தல் குறித்து பயிற்சி 2 மையங்களில் தனித்தனியாக நடந்தது. எளிய முறையில் மாணவர்கள் மத்தியில் எப்படி ஆங்கில மொழியை கற்பிப்பது, பேசுவது, எழுத வைப்பது போன்ற பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டது. இதில் தோகைமலை வட்டார கல்வி அலுவலர் ராஜலட்சுமி, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் ராஜகுமாரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்."

    ×