search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அவினாசி கோவில்"

    • கோவில் பராமரிப்பு பணிகள் சரிவர நடைபெறவதில்லை என்று பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
    • ஈரோடு மாவட்டம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய இக்கோவிலுக்கு வருகின்றனர்.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும் காசிக்கு நிகரானது என சிறப்புவாய்ந்த சோழர் காலத்து பழமைவாய்ந்தபெருங்கருணை நாயகி உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தமிழகத்தில் மூன்றாவது பெரிய தேரான தேரோட்டம் விமர்சையாக நடைபெறும் திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய இக்கோவிலுக்கு வருகின்றனர்.

    கோவில் பராமரிப்பு பணிகள் சரிவர நடைபெறவதில்லை என்று பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இக்கோவில் வளாகத்தில் நட்சத்திர நந்தவன பூங்கா உள்ளது. இந்த பூங்கா சில வருடங்களுக்கு முன்பு தனியார் ஒருவரால் பக்தர்கள் வசதிக்காக ஒன்பது நட்சத்திர மரங்கள் வளர்க்கப்பட்டு, நடைபாதை, குழந்தைகள் விளையாட உபகரணங்கள் எனபல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பராமரிப்பு பணிகள் செய்து வைத்தார். தொடர்ந்து பராமரிப்பு பணகள் செய்யாமல் நாளடைவில் பூங்கா முழுவதும் செடி, கொடிகள் அடர்ந்துபுதர்மண்டி பயனற்ற நிலையில் உள்ளது. இதனால் பக்தர்கள் யாரும் அங்கு செல்வதில்லை. எனவே அதனை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   

    • கோவில் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியன், உபயதாரர் ஈஸ்வரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
    • ரூ. 1.62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணி செய்ய பாலாலய ஹோம பூஜைகள் நடைபெற்றது.

    அவிநாசி:

    அவிநாசி கோவிலில் கும்பாபிேஷக திருப்பணிகள் விரைவில் துவங்க உள்ளது. இதற்கு அச்சாரமாக, அரசமரத்து விநாயகருக்கு முதலில் திருப்பணி செய்ய இந்து அறநிலையத்துறையினர் முடிவெடுத்தனர். இதனால் ரூ. 1.62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணி செய்ய பாலாலய ஹோம பூஜைகள் நடைபெற்றது.

    சிவக்குமார சிவம், தியாகராஜ சிவம் உட்பட கோவில் சிவாச்சாரியார்கள் வாஸ்து ஹோமம், கணபதி ஹோமம் உட்பட பூஜை செய்து, பாலாலயம் செய்து வைத்தனர். கோவில் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியன், உபயதாரர் ஈஸ்வரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

    • நடராஜப்பெருமான் மற்றும் சிவகாமி அம்மையாருக்கு 16 திரவியங்களில் அபிஷேகம் நடைபெற்றது.
    • திருவாசகப் பாடல்களை சிவனடியார்கள் பாராயணம் செய்ய, மங்கள வாத்தியங்கள் முழங்க அபிஷேகம் நடைபெற்றது.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேசுவரர் கோவில் நாயன்மார்களால் பாடல் பெற்ற பெருமைக்குரிய தளமாகும். காசியில் வாசி அவிநாசி என்று காசிக்கு நிகராக போற்றப்படும் இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆடல்வல்லானான நடராஜப்பெருமான் மற்றும் சிவகாமி அம்மையாருக்கு பல்வேறு திரவியங்களில் அபிஷேகம் செய்து ஆனி திருமஞ்சன விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டு ஆனி திருமஞ்சன விழா அவிநாசிலிங்கேசுவரர் கோவிலில் இன்று காலை 10 மணி முதல் நடராஜப்பெருமான் மற்றும் சிவகாமி அம்மையாருக்கு விபூதி, நல்லெண்ணெய், சந்தனாதி தைலம், திருமஞ்சனம், மஞ்சள் பொடி, வில்வப்பொடி, பஞசாமிர்தம்,பால்,மஞ்சள் உள்ளிட்ட 16 திரவியங்களில் அபிஷேகம் நடைபெற்றது.

    விழாவில் திருவாசகப் பாடல்களை சிவனடியார்கள் பாராயணம் செய்ய, மங்கள வாத்தியங்கள் முழங்க அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து நடராஜருக்கும்,சிவகாமி அம்மையாருக்கும் பல்வேறு மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றது. ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டனர்.

    • சண்டிகேசுவரர் சுவாமிக்கு ஆகம மற்றும் சிற்ப சாஸ்திரப்படி அழகிய சிற்ப வேலைப்பாடு களுடன் புதிய திருத்தேர் செய்யப்பட்டது.
    • இரண்டு மாதங்களுக்கு முன் வெள்ளோட்டம் நடைபெற்றது.

    அவினாசி :

    அவினாசி பஞ்ச மூர்த்திகள் 63 நாயன்மார்கள் வழிபாட்டுக்கு குழு அறக்கட்டளை சார்பாக, அவினாசி கோவில் சண்டிகேசுவரர் சுவாமிக்கு ஆகம மற்றும் சிற்ப சாஸ்திரப்படி அழகிய சிற்ப வேலைப்பாடு களுடன் புதிய திருத்தேர் செய்யப்பட்டது.

    இத்திருத்தேர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் வெள்ளோட்டம் நடைபெற்றது.இதையடுத்து திருத்தேர் அவினாசிலி ங்கேசுவரர் கோவில் வசம் ஒப்படைக்கப்பட்டது.

    ×