search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அவிநாசி"

    வீடுகளின் நிலை குறித்து 10 ஆண்டுகளாக பல்வேறு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை.
    அவிநாசி:

    அவிநாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சி மணப்பாளையம் கிராமத்தில் ஆதி திராவிடர் காலனியில் 54 தொகுப்பு வீடுகள் உள்ளது. கடந்த 1998 மற்றும் 2001-ம்ஆண்டில் கட்டப்பட்ட இந்த வீடுகளில் 200க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கூலி தொழிலாளர்கள்.

    இந்த வீடுகளின் மேற்கூரை மற்றும் சுவர் பகுதிகள் வலுவிழந்து வருகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் சேதமடைந்து விபத்து ஏற்படும் அச்சத்தில் அப்பகுதியினர் உள்ளனர்.

    அங்கு வசிப்போர் கூறுகையில், தொகுப்பு வீடுகளில் ஒரு சிலரின் வீடுகள் இடியும் நிலையில் உள்ளதால் உயிருக்கு பயந்து வெளியே அமைக்கப்பட்டுள்ள ஆட்டுக் கொட்டகைகளில் படுத்து வருகிறோம். வீடுகளின் நிலை குறித்து 10 ஆண்டுகளாக பல்வேறு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை.

    தற்போது பெய்து வரும் தொடர்மழையால் வீடுகளுக்குள் மழைநீர் அதிக அளவில் ஒழுகுவதாகவும் எந்த நேரத்திலும் இடிந்துவிழும் அபாய நிலை உள்ளது  என்றனர்.

    இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில்: 

    தற்போது பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் கட்டும் பணிக்குதான் அரசு நிதி ஒதுக்கி வருகிறது. ஏற்கனவே உள்ள தொகுப்பு வீடுகளை பராமரிக்க நிதி ஒதுக்கீடு வரவில்லை. நிதி கிடைத்தவுடன் முன்னுரிமை அடிப்படையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
    இந்தாண்டு அவிநாசி வட்டத்தில் 100 முதல் 500 ஏக்கர் வரை மஞ்சள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
    அவிநாசி:

    அவிநாசி அருகே தண்டுக்காரன்பாளையம், சேவூர், நடுவச்சேரி உள்ளிட்ட இடங்களில் மஞ்சள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

    சில ஆண்டுகளாக உரிய விலை கிடைக்காததால் மஞ்சள் சாகுபடி பரப்பு குறைந்தது. பொதுவாக ஜூலை - ஆகஸ்டு  மாதங்களில் மஞ்சள் விளைச்சல் களைகட்டும். இந்தாண்டு அவிநாசி வட்டத்தில் 100 முதல் 500 ஏக்கர் வரை மஞ்சள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இது கடந்தாண்டை விட அதிகம் என வேளாண் துறையினர் தெரிவித்தனர். 

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 

    ‘மஞ்சள் ஓராண்டு பயிராக இருப்பதால் விலையில் லாபம் கிடைத்தால் மட்டுமே மஞ்சள் பயிரிடுவர். முந்தைய ஆண்டுகளில் மஞ்சளுக்கு நல்ல விலை இல்லை. 

    இந்தாண்டு ஓரளவு விலை கிடைக்கும் என நம்புகிறோம் என்றனர். மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், விவசாய நிலங்களில் நிரந்தர பசுமையை உருவாக்கவும் ரூ.1.14 கோடியில்  வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மூலம்  வேளாண் காடு வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    அவிநாசி வட்டாரத்துக்கு 20 ஆயிரம் தேக்கு நாற்று, 500 வேம்பு நாற்றுகள் இலக்கீடாக ஒதுக்கப்பட்டு விரைவில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. 

    நடவு செய்யப்படும் அனைத்து மரக்கன்றுகளுக்கும் மரம் ஒன்றுக்கு ரூ.7 வீதம் வளர்ப்பு மானியமாக அடுத்தாண்டு முதல் வழங்கப்படும் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
    ×